I


360திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



அந்நீரின் நீங்காத ஒலியினால், அனைவா என்று அழைஇ - அன்னையே வா
என்று அழைத்து, தன் தேசுதான் ஆம் நகையால் தழீஇ - தனது
வெள்வொளியாகிய புன்முறுவலால் தழுவி, எதிர் ஏற்பச் சென்றாள் - எதிர்
கொள்ளுமாறு சென்றருளினார் எ - று.

     போனாள் : பெயர். அழைத்து, தழுவி யென்னும் வினையெச்சங்கள்
விகாரப்பட்டு அளபெடையாயின. இது தற்குறிப்பேற்றவணி. (27)

கிட்டிப் பொருப்பைக் கிரியோடு கிரிக டாக்கி
முட்டிப் பொருதா லெனவேழ முழங்கிப் பாயப்
புட்டிற் புறத்தார் மறத்தார்கணை பூட்டு வில்லார்
வட்டித் துருமே றெனவார்த்து வளைந்து கொண்டார்.

     (இ - ள்.) பொருப்பைக் கிட்டி - (இவ்வாறு) திருக்கயிலை மலையை
நெருங்கி, கிரியோடு கிரிகள் தாக்கி - மலைகளோடு மலைகள் தாக்கி.
முட்டிப் பொருதாலென - மோதிப் போர் செய்தாற்போல, வேழம் முழங்கிப்
பாய - யானைகள் பிளிறிட்டுப் பாய, மறத்தார் - வீரத்தினையுடையவரும்,
புட்டில் புறத்தார் - அம்புக்கூடு தாங்கிய முதுகினை யுடையவரும், கணை
பூட்டு வில்லார் - கணை பூட்டிய வில்லை யுடையவருமாய்; வட்டித்து -
சுழன்று, உரும் ஏறு என - இடியேற்றைப்போல, ஆர்த்து - ஆரவாரித்து,
வளைந்து கொண்டார் - (படைவீரர்கள்) சூழ்ந்து கொண்டார்கள் எ - று.

     புட்டில் - அம்புக்கூடு; துணி;

"கணைப்புட்டிலுங் கட்டமைந்த, வில்லுஞ் சுமக்கப் பிறந்தேன்"

என்பது இராமாயணம்; வட்டித்து - சுழன்று; இது சுழற்றியெனப்
பிறவினை யாகியும் வரும்;

"மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்து"

எனப் புறததுள் வருதல் காண்க; இதற்கு வஞ்சினங்கூறி யெனப்
பொருளுரைப்பாரு முளர். (28)

ஓடித் திருமா மலைகாவல ரும்ப ரார்க்கு
நாடிப் பணிதற் கரிதாகிய நந்தி பாதங்
கூடிப் பணிநதித் திறங்கூறலுங் கொற்ற வேனந்
தேடிக் கிடையா னுளந்தேர்ந்தன னந்தி யெந்தை.

     (இ - ள்.) மா திருமலை காவலர் ஓடி - பெரிய திருக்கயிலை
மலையைக் காப்பவர் ஓடி, உம்பரார்க்கும் - தேவர்களுக்கும், நாடிப்
பணிதற்கு அரிய ஆகிய - காலமறிந்து வணங்குதற்கு அருமையாகிய, நந்தி
பாதம் கூடிப் பணிந்து - நந்திதேவர் திருவடிகளை யடைந்து வணங்கி,
இத்திறம் கூறலும் - இச்செய்தியைக் கூறியவுடன், எந்தை நந்தி - எம்
தந்தையயகிய திரு நந்திதேவர். கொற்ற ஏனம் தேடிக் கிடையான் - வெற்றி
பொருந்திய திருமாலாகிய பன்றி தேடிக் காணப்படாத இறை வனது, உளம்
தேர்ந்தனன் - திருவுள்ளக் குறிப்பை ஆராய்ந் தறிந்தார் எ - று.