உம்பரானும்
என்க. உம்பரார் - தேவர்; உம்பர் - மேலிடம். அரிது
பண்பு மாத்திரையாய் நின்றது; பாதமேன்னும் ஒருமைபற்றி அரிதெனக்
கூறினா ரெனலுமாம். கொற்றவேனம் தேடிக் கிடையா னென்ற கருத்தினை.
"நான்முகன் முதலா
வானவர் தொழுதெழ
ஈரடி யாலே மூவுல களந்து
நாற்றிசை முனிவரு மைம்புலன் மலரப்
போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்
றடிமுடி யறியு மாதர வதனிற்
கடுமுர ணேன மாகி முன்கலந்
தேழ்தல முருவ விடந்து பின்னெய்த்
தூழி முதல்வ சயசய வென்று
வழுத்தியுங் காணா மலரடி யிணைகள்" |
என்னும் திருவாசகத்தா
லறிக. முதற்குரு நாதனாகலின் எந்தை என்றார்.
(29)
வென்றிக்
கணத்தை விடுத்தான் கனமீது* பெய்த
குன்றிக் கணம்போற் கழல்கண்ணழல் கொப்ப ளிப்பச்
சென்றிக் கனைய மொழியாள்பெருஞ் சேனை யோடும்
ஒன்றிக் கடலுங் கடலும்பொரு தொத்த தன்றே. |
(இ
- ள்.) வென்றிக் கணத்தை விடுத்தான் - (அவ்வாறு உணர்ந்த
நந்தி தேவர்) வெற்றி பொருந்திய பூதகணங்களை ஏவினார்; கனம் மீது
பெய்த - (அவை) முகிலிற் பெய்துவைத்த, குன்றிக் கணம்போல் -
குன்றிமணிக் கூட்டம்போல, சுழல்கண் - சுழலுங் கண்களினின்றும், அழல்
கொப்பளிப்ப - தீயானது சிந்த, சென்று - போய், இக்கு அனைய மொழியால்
- கரும்பின் சாற்றையொத்த இனிய மொழிகளையுடைய பிராட்டியாரின்,
பெருஞ் சேனையோடும் ஒன்றி - பெரிய படைகளோடு கலந்து போர்
புரிதலால் (அச்செயல்), கடலும் கடலும் பொருதது ஒத்தது - கடலுங் கடலும்
தம்முட் போர்செய்தலை ஒத்தது எ - று.
மேகங்கள்
பூதகணங்கட்கும். குன்றிமணிகள் அவற்றின் சுழலும்
கண்கட்கும் உவமை. இக்கு - கரும்பு; அதன் சாற்றிற்காயிற்று. ஒன்றிப்
போர்புரிய அது என விரித்தக்கொள்க. பொருதது என்பது பொருது என
விகார மாயிற்று; பொருதது : தொழிற்பெயர். அன்றும் ஏயும் அசைகள். (30)
சூலங் கண்மழுப்
படைதோமர நேமி பிண்டி
பாலங் கள்கழுக் கடைவாட்படை தண்ட நாஞ்சில்
ஆலங் கவிழ்க்கின்ற வயிற்படை வீசி யூழிக்
காலங் கலிக்குங் கடல்போன்ற களம ரார்ப்பு. |
(பா
- ம்.) * கனன்மீது
|