(இ
- ள்.) சூலங்கள் - சூலப்படைகளையும், மழுப்படை - மழுவாட்
படைகளையும், தோமரம் - பெரிய ஈட்டிகளையும், நேமி - திகிரிப்
படைகளையும், பிண்டி பாலங்கள் - எறிபடைகளையும், கழுக்கடை - சிறிய
ஈட்டிகளையும், வாட்படை - வாட்படைகளையும், தண்டம் - தண்டங்களையும், நாஞ்சில் -
கலப்பைகளையும், ஆலம் கவிழ்க்கின்ற அயில் படை -
நஞ்சினைக் கொட்டுகின்ற வேற்படைகளையும், களமர் வீசி ஆர்ப்பு -
வீரர்கள் (ஒருவர்மேல் ஒருவர்) வீசி ஆரவாரிக்கும் ஆரவாரங்கள்,
ஊழிக்காலம் கலிக்கும் கடல்போன்ற - ஊழிக்காலத்தில் ஒலிக்கும் கடலின்
ஒலிகளை ஒத்தன எ - று.
கடல்
அதன் ஒலிக்காயிற்று. போன்றவெனப் பன்மையாற்
கூறினமையால் ஆர்ப்புகள் என்க. போன்றது என்பதன் துவ்வீறு கெட்டது
என்னலுமாம். (31)
எறிகின் றனவோச் சுவவெய்வன வாதியாகச்
செறிகின் றனபல் படைசெந்நிறப் புண்ணீர் மூழ்கிப்
பறிகின் றனவும் பிழைக்கின்றனவும் பட்டுத் தாக்கி
முறிகின் றனவு முயன்றார்வினைப் போக மொத்த. |
(இ
- ள்.) எறிகின்ற - எறியப்படுவனவும், ஓச்சுவ - ஓச்சப்படுவனவும்,
எய்வன - எய்யப்படுவனவும், ஆதி ஆகச் செறிகின்ற - முதலாகப்
பொருந்திய, பல்படை - பலபடைகளும், செந்நிறப் புண்நீர் மூழ்கி - சிவந்த
நிறத்தினையுடைய உதிர நீரில் முழுகி, பறிக்கின்றனவும் - கழன்றோடுவனவும்,
பிழைக்கின்றனவும் - உடம் பிலே தாக்காது தவறிப்போவனவும், பட்டுத்தாக்கி
முறிகின்றனவும் - உடம்பிலே பட்டுத் தாக்குதலால் முறிவனவுமாய், முயன்றார்
வினைப் போகம் ஒத்த - முயன்று செய்தவர்களின் இருவினைக் கீடாகவரும்
போகங்களை ஒத்தன எ - று.
எறிகின்றன
- வேல் முதலியன : ஓச்சுவ - தண்டம் முதலியன; எய்வன
- அம்பு முதலியன; ஆதியென்றமையால் வெட்டுவனவாகிய வாள் முதலியன
கொள்க. எறிகின்றன முதலியன வினையாலணையும் பெயர்கள் :
படுசொற்றொக்கு நின்றன. செறிகின்றன : பெயரெச்சமுற்று. புண்ணீர் மூழ்கி,
என்றமையால் உடம்பிற்றைத்து எனக் கொள்க. போகங்கள் பொருந்துதலும்
பொருந்தாமையும் ஒருகாற் பொருந்தி யொருகாற் பொருந்தாமையு மாகி
வேறுபாடுடைமை போல இவைகளும் படுதலும் படாமையும் பட்டு
அழிவெய்துதலும் ஆகிய வேறுபாடுடையன வென்க. ஆகி என விரிக்க :
ஓச்சுவ. ஒத்த என்பவற்றில் அன் சாரியை தொக்குநின்றது. (32)
தெரிசிக்க வந்த சிலதேவர் சிறைப்பு ளூர்தி
வெருவிப் பறந்த வொழிந்தோர்விலங் கூர்தி மானங்
கருவிப் படையாற் சிதைபட்டன கால னூர்தி
குருதிப் புனலுக் கதுகொற்றவை யுண்ட தென்ன. |
(இ
- ள்.) தெசிரிக்க வந்த சில தேவர் - கண்டு வணங்குதற்கு வந்த
திருமால் முதலிய சில தேவர்களின், சிறைப்புள்ஊத்தி - கலுழன்
முதலியசிறைகளையுடைய பறவையூர்திகள், வெருவிப்பறந்த - அஞ்சிப்
|