I


திருமணப் படலம்363



பறந்தன; ஒழிந்தோர் விலங்கு ஊர்தி - மற்றைத் தேவர்களின்
விலங்கூர்திகளும், மானம் - விமானங்களும், கருவிப் படையால் சிதை
பட்டன - படைக் கலங்களினால் அழிந்தன; கொற்றவை உண்டது என்ன -
காளியினால் உயிருண்ணப்பட்ட அசுரனாகிய கடாவானது ஒழுக்கியது போல,
காலன் ஊர்தி - கூற்றுவன் ஊர்தியாகிய எருமைக் கடா, குருதிப் புணல்
உக்கது - குருதி நீரைக் கக்கியது எ - று.

     இறைவனைத் தரிசிக்க வந்தவென்க; போரினைக் காணவந்த எனலுமாம்.
விலங்கு - ஐராவதம் முதலியன. மானம் - விமானம். கருவிாகிய படை;
படைக்கலம். கொற்றவை யுண்டதென்றது மகிடாசுரனை,

"ஆனைத்தோல் போர்த்துப் புலியி னுரியுடுத்துக்
கானத் தெருமைக் கருந்தலைமே னின்றாயால்"

என்றும்,

"வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்று"

என்றும் சிலப்பதிகாரத்து வேட்டுவ வரியுள் வருதல் காண்க. கடா
வென்பதுபற்றி உண்டதென அஃறிணையாற் கூறினார். பறந்த, உண்டது
என்பவற்றிற்கு மேல் உரைத்தாங் குரைக்க. (33)

பொருகின் றதுகண்டு விச்சாதரர் போகம் வீடு
தருகின் றவனைத் தொழவானெறி சார்ந்து நேரே
வருகின் றவாவேறு வழிக்கொடு போவ ரன்புக்
குருகின் றளிர்மெல் லடியாரொடு மூற்ற மஞ்சா.

     (இ - ள்.) போகம் வீடு தருகின்றவனைத் தொழ - போகத்தையும்
வீடுபேற்றையும் அளிக்கின்ற இறைவனை வணங்க, வான்நெறி சார்ந்து -
வானின் வழியைப் பொருந்தி, நேரே வருகின்றவர் விச்சாதரர் - நேரே
வருன்றவர்களாகிய வித்தியாதரர்கள், பொருகின்றது கண்டு - போர்
செய்தலைக் கண்டு, ஊற்றம் அஞ்சா - (தமக்கு வரும்) இடையூற்றிற்கு அஞ்சி,
அன்புக்கு உருகு இன் தளிர் மென் அடியாரொடு - அன்பினால் உருகுகின்ற
இனிய தளிர்போலும் மெல்லிய அடிகளையுடைய மாதராருடன், வேறு
வழிக்கொடு போவர் - வேறு வழியால் திருக்கைலைக்குச் செல்வார்கள்
எ - று.

     பொருகின்றது : தொழிற் பெயர். வருகின்றவராகிய விச்சாதரர் எனக்
கூட்டுக : அன்புக்கு - அன்பால். ஊற்றம் ஊறு; அம் : பகுதிப் பொருள்
விகுதி. (34)

திங்கட் படைசெங் கதிரோன்படை சீற்ற மேற்ற
அங்கிப் படைதீம் புனலான்படை நார சிங்க
துங்கப் படைசிம்பு ணெடும்படை சூறைச் செல்வன்
வெங்கட் படைபன் னகவெம்படை மாறி விட்டார்.

     (இ - ள்.) திங்கள் படை - சந்திரக் கணைக்கு, செம் கதிரோன் படை
- சூரியக் கணையையும், சீற்றம்ஏற்ற அங்கிப் படை - சினத்தைப்