I


364திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



பொருந்திய அக்கினிகி கணைக்கு, தீம்புனலான் படை - இனிய வருணக்
கணையையும், துங்க நாரசிங்கப் படை - உயர்ச்சி பொருந்திய நரசிம்மக்
கணைக்கு, நெடுஞ் சிம்புள் படை - நீண்ட சரபக் கணையையும், வெம் கண்
சூறைச் செல்வன் படை - கொடிய முனையை யுடைய வாயுக் கணைக்கு,
வெம் பன்னகப் படை - கொடிய நாகக் கணையையும், மாறி விட்டார் -
மாறிமாறி விடுத்தார்கள் எ - று.

     திங்கள் முதலியவற்றைத் தெய்வமாகவுடைய அத்திரங்கள் அப்
பெயர்களால் வழங்கப்படும். சந்திராத்திரம் முதலியவற்றை அழிக்க வல்லன
சூரியாத்திரம் முதலிய வாகலின், அவற்றை மாறித் தொடுத்தாரென்க. சிம்புள்
- சரபம்; சிங்கத்தை யழிக்கவல்லது; இதனை எண்காற்பறவை யென்பர்;
பெருங்கதையள் ‘பல்வலிப் பறவை’ என்று கூறப்பட்டுள்ளது; இங்கே
நாரசிங்கம் என்றதற் கேற்பச் சிவபெருமானாகிய சரபம் என்று
கொள்ளவேண்டும். சூறை - கடுங்காற்று. பாம்பு காற்றை யுண்பதாகலின்
அதற் கெதிராயிற்று. (35)

கொட்புற் றமராடு மிக்கொள்கையர் தம்மி னந்தி
நட்புற் றவர்கைப் படைதூட்பட ஞான மூர்த்தி
பெட்புற் றருள வருமெங்கள் பிராட்டி வெய்ய
கட்புற் றரவின் கணைமாரிகள் தூற்றி நின்றாள்.

     (இ - ள்.) கொட்புற்று அமர் ஆடும்இ கொள்கையர் தம்மில் - சுழன்று
போர்செய்யும் இத்தன்மையர் தங்களுள், நந்தி நட்பு உற்றவர் - நந்தியெம்
பெருமானிடம் அன்பு பொருந்திய படைவீரர்களின், கைப்படை தூள்பட -
கையிலுள்ள படைக்கலன்கள் துகளாகுமாறு, ஞான மூர்த்தி பெட்பு உற்று
அருளவரும் எங்கள் பிராட்டி - ஞானவடிவினனாகிய சிவபெருமான்
விரும்பியருள வருகின்ற எம் இறைவியாகிய தடாதகைப் பிராட்டியார், புற்று
வெய்யகண் அரவின் - புற்றிலுள்ள கொடிய கண்களையுடைய பாம்பிகளைப்
போலும், கணை மாரிகள் தூற்றி நின்றாள் - அம்பு மழைகளைப் பொழிந்து
நின்றார் எ - று.

     அமராடல் - அமர்செய்தல். தலைவரிடம் அன்புள்ள வீரரென்பார்
‘நட்புற்றவர்’ என்றார். சந்தத்தின் பொருட்டுத் ‘தூட்பட எனத் திரிந்தது.
பெட்புற்று அருள எனவும், பெட்பு உற்றருள எனவும் இருவகையாகப்
பிரித்தலமையும். புற்றினின்று அரவு வெளிப்படுதல் போலத் தூணியினின்று
வெளிப்படுதலின் ‘புற்றரவின்’ என உவமை கூறினார்; கொடுமை மிகுதி
தோன்றவுமாம். (36)

கையிற் படையிற் றனர்கற்படை தொட்டு வீரர்
மெய்யிற் படுகென்று விடுக்குமுன் வீரக் கன்னி
பொய்யிற் படுநெஞ் சுடையார்தவம் போல மாய
நெய்யிற் படுவச் சிரவேலை நிமிர்த்து வீசி.

     (இ - ள்.) கையில் படை அற்றனர் - கையிலுள்ள படைக்கலன்கள்
அழியப்பெற்றவராகிய சிவகண வீரர்கள், கல்படை தொட்டு - கற்களாகிய
படைகளை எடுத்து, வீரர் மெய்யில் படுக என்று விடுக்குமுன் -
(பிராட்டியாரின்) படைவீரர்கள் உடம்பில் படுக என்று விடுப்பதற்கு முன்