என்றார் வள்ளுவனாரும்;
இடபமுமாம். அற்று என்னும் சினைவினைகள் அடைவார் என்னும் முதல்வினையைக் கொண்டன.
(39)
உடையா னடிதாழ்ந்
திவையோதலு மோத நீத்தச்
சடையா னிளவா ணகைசெய்து தருமச் செங்கண்
விடையான் சிலையா னிகல்வென்றி விளக்குந் தெய்வப்
படையா னெழுந்தா னமிராயி பாரிற் சென்றான். |
(இ
- ள்.) உடையான் அடி தாழ்ந்து - இறைவன் திருவடியை
வணங்கி, இவை ஓதலும் - இந்நிகழ்ச்சிகளைக் கூறுதலும், ஓதம் நீத்தம்
சடையான் - அலைகளையுடைய கங்கையைச் சடையிலுள்ள இறைவன், இள
வாள்நகைசெய்து - ஒளி பொருந்திய புன்முறுவலைச் செய்து, செம் கண்
தருமவிடையான் - சிவந்த கண்களையுடைய அறவேற்றினை யுடையவனாய்,
சிலையான் - வில்லையுடையவனாய், இகல் வென்றி வினைக்கும் - போரில்
வெற்றியைத் தரும், தெய்வப்படையான் - தெய்வத்தன்மையுடைய
படைகளையுடையவனாய், எழுந்தான் அமர் ஆடிய பாரில் சென்றான் -
எழுந்து போர் செய்யும் களத்திற் சென்றான் எ - று.
உடையான்
- உலகுயிர்களை யெல்லாம் உடைமையாகவும் அடிமையாகவும் உடையவன். நீத்தம் - வெள்ளம்;
கங்கை. அறக்கடவுளாகிய விடை. விடையான் முதலியன முற்றெச்சம். ஆடிய : செய்யிய வென்னும்
எச்சமுமாம். (40)
[அறுசீரடி யாசிரியவிருத்தம்]
|
மேவி யாகவப்
பாரிடைப் பாரிட வீரரை யமராடி
ஓவி லாவலி கவர்ந்தது மன்றினி யுருத்தெவ ரெதிர்ந்தாலுந்
தாவி லாவலி கரவவு மடங்கலின் றனிப்பிணா வெனநிற்குந்
தேவி யார்திரு வுருவமுஞ் சேவகக் செய்கையு மெதிர்கண்டான். |
(இ
- ள்.) மேவி - சென்று, ஆகவப் பாரிடை - போர்க்களத்தில், பாரிட
வீரரை அமர் அடி - பூதகண வீரரோடு போர்புரிந்து (அவர்களின்), ஓவு இலா வலி கவர்ந்ததும்
அன்று - நீங்காத வலிமையைக் கொண்டதும்
அல்லாமல், இனி உருத்து எவர் எதிர்ந்தாலும் - இனி எவர் சினந்து
எதிர்த்தாலும், தாவு இலா வலி கவரவும் - (அவர்களின்) கெடாத வலியைக்
கொள்ளவும், தனி மடஙகலின் பிணா என நிற்கும் - ஒப்பற்ற பெண்
சிங்கத்தைப்போல நிற்கின்ற, தேவியார் திரு உருவமும் - அம்மையாரின்
திருவுருவத்தையும் சேவகச் செய்கையும் எதிர் கண்டான் - வீரச்
செயல்களையும் நேரிற் கண்டருளினான் எ - று.
ஆகவம்
- போர். பாரிடம் - பூதம். அன்றியென்னும் வினை
யெச்சத்திகரம் உகரமாயிற்று. வலியும் கவர என உம்மையை மாற்றி
னும்மையும், பிணா - பெண். (41)
|