I


திருமணப் படலம்367



ஒற்றை வார்கழற் சரணமும்
     பாம்பசைத் துடுத்தவெம் புலித்தோலுங்
கொற்ற வாண்மழுக் கரமும்வெண்
     ணீறணி கோலமுந் நூன்மார்புங்
கற்றை வேணியுந் தன்னையே
     நோக்கிய கருணைசெய் திருநோக்கும்
பெற்ற தன்வலப் பாதியைத்
     தடாதகைப் பிராட்டியு மெதிர்கண்டாள்.

     (இ - ள்.) ஒற்றை வார் கழல் சரணமும் - ஒன்றாகிய நீண்ட வீர
கண்டையைத் தரித்த திருவடியையும், பாம்பு அசைத்து உடுத்த வெம் புலித்
தோலும் - பாம்பாகிய கச்சினால் இறுகப் பிணித்து உடுத்திய கொடிய
புலித்தோலையும், கொற்றவாள் மமுக்கரமும் - வெற்றியையும் ஒளியையு
முடைய மழுப்படை யேந்திய திருக்கரத்தையும், வென் நீறு அணிகோலம் -
வெள்ளிய திருநீறுதரித்த கோலத்தினையுடைய, முந்நூல் மார்பும் -
பூணுலணிந்த திருமார்பையும், பற்றை வேணியும் - திரண்ட சடையையும்,
தன்னையே நோக்கிய கருணைசெய் திரு நோக்கும் - தன்னையே பார்க்கின்ற
அருள் புரியும் திருக்கண்களையும், பெற்ற உடைய, தன் வலப் பாதியைத்
தடாதகைப் பிராட்டியும் எதிர்கண்டாள் - தன் வலப் பாதியைத் தடாதகைப்
பிராட்டியும் எதிர்கண்டாள் - தன் வலப் பாதியாகிய சிவபெருமானைத்
தடாதகைப் பிராட்டியாரும் நேரே கண்டருளினார் எ - று.

     வெம்மை : புலிக்கு அடை. வாளாகிய மழுவுமாம் : கோலமும் நூன்
மார்பும் எனப் பிரித்தலுமாம்; இதற்கு நகரம் விரித்தல். பிராட்டி திருவுருவம்
இடப் பாரியாகலின் பெருமான் றிருவுருவை வலப்பாரியென்றார்;

"தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ"

என்னும் திருவாசகம் சிந்திக்கற் பாலது. (42)

கண்ட வெல்லையி லொருமுலை
     மறைந்தது கருத்தினாண் மடனச்சங்
கொண்ட மைந்திடக் குனிதர
     மலர்ந்தபூங் கொம்பரி னொசிந்தொல்கிப்
பண்டை யன்புவந் திறைகொளக்
     கருங்குழற் பாரமும் பிடர்தாழக்
கெண்டை யுண்கணும் புறவடி
     நோக்கமண் கிளைத்துமின் னெனநின்றாள்.