(இ
- ள்.) கண்ட எல்லையில் - பார்த்த அளவில், ஒரு முலை
மறைந்தது - ஒரு கொங்கை மறைந்தது (அதனால்), கருத்தில் நாண் மடன்
அச்சம் கொண்டு அமைந்திட - உள்ளத்தின்கண் நாணமும் மடமும் அச்சமும்
இடங்கொண்டு பொருந்திட, குனிதர மலர்ந்த பூங் கொம்பரின் - வளையும்படி
பூத்த பூங்கொம்பைப் போல, ஒசிந்து ஒல்கி - வளைந்து துவண்டு, பண்டை
அன்பு வந்து இறைகொள - தொல்லை யன்பானது வந்து தங்க, கருங்குழல்
பாரமும் பிடர் தாழ - கரிய குழற் கற்றை பிடரியிற் கரியவும், கெண்டை
உண்கணும் புற அடி நோக்க - சேல்போன்ற மையுண்ட கண்கள் புறவடியை
நோக்கவும், மண்கிளைத்து மின் என நின்றாள் - மண்ணைத் திருவிரலாற
கீறிக்கொண்டு மின்னலை ஒத்து நின்றருளினார் எ-று.
"அச்சமு நாணு
மடனு முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப" |
எனத் தொல்காப்பியனார்
கூறியவாறு அவை யென்றும் உளவேனும் ஈண்டு
நாயகனெதிர்ப்பாட்டினால் முலை மறைந்தமையின் மிக்கு விளங்கின
வென்றார்; அன்றி இதுகாறும் ஆண்டன்மை தோற்றி வந்தமையால் ஈண்டுப்
பெண்மை தோன்றிற்று என்றாருமாம். குனி தர மலர்ந்த வென்றது நிறையப்
பூத்த என்படி; முன்னரும் குனிதர நிறையப் பூத்த கொம்பு என்றார். ஈற்றுப்
போலி. பண்டை அன்பு - தொன்றுதொட்டுள்ள அன்பு. வருதல் - வெளிப்
படுதல். பாரமும், கண்ணும் என்பவற்றிலுள்ள உம்கைள் முறையே தாழ,
நோக்க என்பவற்றுடன் பிரித்துக் கூட்டப்பட்டன, திருவடியின் பெருவிரலால்
மண்ணைக் கிளைத்து : தன்மை நவிற்சியணி.
(43)
நின்ற மென்கொடிக்
ககல்விசும்
பிடையர னிகழ்த்திய திருமாற்றம்
அன்ற றிந்தமூ தறிவனாஞ்
சுமதிசீ றடிபணிந்* தன்னாயிக்
கொன்றை யஞ்சடைக் குழகனே
நின்மணக் குழகனென் றலுமன்பு
துன்ற நின்றவட் பார்த்தருட்
சிவபரஞ் சோதிமற் றிதுகூறும். |
(இ
- ள்.) நின்ற மென் கொடிக்கு - (இங்ஙனம்) நின்றமெல்லிய
கொடி போல்பவராகிய பிராட்டியாருக்கு, அகல் விசும்பிடை அன்று அரன்
நிகழ்த்திய திருமாற்றம் - அகன்ற விசும்பின்கண் முன் இறைவன்
அருளிச்செய்த திருவாக்கினை, அறிந்த மூது அறிவானாம் சுமதி - தெரிந்த
பேரறிவினை யுடையவனாகிய சுமதியென்பான், சிறு அடி பணிந்து -
பிராட்டியாரின் திருவடிகளை வணங்கி, அன்னாய் - தாயே; இ கொன்றை
அம் சடைக் குழகனே - இந்தக் கொன்றைமாலையை யணிந்த அழகிய
சடையையுடையபேரழகனே, நின்மணக் குழகன் என்றலும் - நின் மணவாளன்
என்று கூற, அன்பு துன்ற நின்றவள் பார்த்து - அன்பு நிறைய
(பா
- ம்.) * சுமதி சென்றடி பணிந்து.
|