நிற்கின்ற பிராட்டியாரை
நோக்கி, அருள் சிவபரஞ் சோதி இது கூறும் -
கருணையையுடைய சிவபரஞ் சுடராகிய இறைவன் இதனைச் சொல்வான்
எ - று.
கொடிக்கு
என்றலும் எனக் கூட்டுக. திருமாற்றம், இப் பொன்
னனையாள் தனக்கிறைவன் வரும்பொழுதோர் முலைமறையும் என்பது.
குழகன் - அழகன்! மணமகன். மற்று : அசை; வினைமாற்றுமாம். (44)
என்று தொட்டுநீ திசையின்மேற்
சயங்குறித் தெழுந்துபோந் தனையாமும்
அன்று தொட்டுநம் மதுரைவிட்
டுனைவிடா தடுத்துவந் தனமுன்னைத்
தொன்று தொட்டநான் மறையுரை
வழிவரு சோமவா ரத்தோரை
நன்று தொட்டநாண் மணஞ்செய
வருதுநின் னகர்க்குநீ யேகென்றான். |
(இ - ள்.) என்று தொட்டு நீ - எந்தக்
காலம் முதலாக நீ,
திசையின்மேல் சயம் குறித்து எழுந்து போந்தனை - திக்குகளின்மேல்
வெற்றியைக் குறித்து எழுந்து போந்தாயோ, அன்று தொட்டு - அந்தக் கால
முதல், யாமும் நம் மதுரை விட்டு - யாமும் நம்முடைய மதுரைப் பதியை
விட்டு, உனை விடாது அடுத்து வந்தனம் - உன்னை நீங்காது உடன்
வந்தோம்; தொன்று தொட்ட நால்மறை உரைவழி - பழைய நான்மறைகளிற்
கூறியவாறு, வரு சோமவாரத்து - வருகின்ற திங்கட்கிழமை யன்று, நன்று
ஓரை தொட்ட நாள் - நல்ல முழுத்தங் கூடிய பொழுதில், மணம் செய
வருதும் - திருமணஞ் செய்ய வருவேம்; நீ நின்நகர்க்கு ஏகு என்றான் - நீ
உன் நகரமாகிய மதுரைக்குச் செல்வாயாக என்று கூறியருளினான் எ - று.
திசையின்மேற்
சயம் - திக்கு விசயம். போந்தனையோ என விரிக்க.
தொட்டு - தொடங்கி. நம்மதுரை விட்டு என்றது அதுவே தாம் என்றும்
எழுந்தருளியிருக்கும் பழம்பதி என்று குறிப்பித்தவாறு. விடாது அடுத்து
வந்தது வென்றிதருதற்கு; காதலாலுமாம். தொன்று தொட்ட -
பழமையாகவுள்ள. மறை உரைவழி என்பதனை, மறை யினது உரைவழி,
மறையானது உரைத்தவழி, மறையாகிய உரைவழி எனப் பலவகையாக
விரித்துரைத்தலும் சாலும். சோமவாராமாகிய நாள் என்னலுமாம். ஓரை -
முழுத்தம்;
"மறைந்த வொழுக்கத்
தோரையு நாளுந்
துறந்த வொழுக்கம் கிழவோற் கில்லை" |
எனத் தொல்காப்பியம்
கூறுதலால் பல்லாயிரம் ஆண்டுகளின் முன்னரே
தமிழ்மக்கள் ஓரை முதலியவற்றை அறிந்துளா ராதல் பெறப்படும். (45)
என்ற நாதன்மே லன்பையு முயிரையு மிருத்தியா யஞ்சூழக்
குன்ற மன்னதேர் மேற்கொடு தூரியங் குரைகட ரெனவார்ப்ப
நின்ற தெய்வமால் வரைகளும் புண்ணிய நீத்தமு நீத்தேகி
மன்றன் மாமது ராபுரி யடைந்தனள் மதிக்குல விளக்கன்னாள். |
|