I


திருநாட்டுச் சிறப்பு37



கானத்து - முல்லைநிலத்தின்கண், ஒல்லெனத்தவழ்ந்து - விரையத் தவழ்ந்து,
தீம்பால் உண்டு - இனிய பாலைப் பருகி, ஒரீஇ - அதனினின்றும் நீங்கி,
திண்தோள் மள்ளர் - வலிய தோளையுடைய உழவர்களின், செல்என
தெழிக்கும் - மேகம்போல் உரப்புகின்ற, பம்பை தீம்குரல் -
பம்பையினுடைய இனிய குரலை, செவி வாய் தேக்கி - செவியினிடமாக
நிரப்பி, மெல்லென - மெதுவாக, காலில் போகி - காலாற் சென்று,
பணைதொறும் விளையாட்டு எய்தி - பண்ணைகள்தோறும் விளையாடுதலைப்
பொருந்தி எ - று.

     கல்லென - ஒலிக்குறிப்பு. ஒல்லென - விரைய; ஒலிக்குறிப்புமாம்.
செவிவாய்த் தேக்கி யென்றது உபசாரம். பண்ணை - மகளிர்
விளையாட்டிடம்; விகாரம். முல்லைநிலத்து ஆய்ச்சியரின் பாற்குடங்களை
யுருட்டி யென்றும், கால்வாய் வழியே சென்றென்றும், கழனிகடோறும்
பாய்ந்தென்றும் புனலுக்கேற்ப உரைத்துக்கொள்க. இது குழவித்தன்மை
கூறியவாறு. (8)

அரம்பைமென் குறங்கா மாவி
     னவிர்தளிர் நிறமாத் தெங்கின்
குரும்பைவெம் முலையா* வஞ்சிக்
     கொடியிறு நுசுப்பாக் கூந்தல்
சுரும்பவிழ் குழலாக் கஞ்சஞ்
     சுடர்மதி முகமாக் கொண்டு
நிரம்பிநீள் கைதை வேலி
     நெய்தல்சூழ் காவில் வைகி.

     (இ - ள்.) அரம்பைமென் குறங்கா - வாழைமரங்களை மெல்லிய
தொடைகளாகவும், மாவின் அவிர்தளிர் நிறமா - விளங்குகின்ற மாந்
தளிர்களை நிறமாகவும், தெங்கின குரும்பை - தென்னங் குரும்பைகளை,
வெம்முலையா - விருப்பத்தைத்தரும் முலைகளாகவும், வஞ்சிக்கொடி -
வஞ்சிக்கொடியை, இறுநுசுப்பா - ஒடிகின்ற இடையாகவும், கூந்தல் -
கூந்தற்பனையின் மடலை, சுரும்பு அவிழ்குழலா - வண்டுகள் பரந்த
கூந்தலாகவும், கஞ்சம் சுடர் மதிமுகமாக்கொண்டு - தாமரைமலரை
ஒளியையுடைய மதிபோலும் முகமாகவுங்கொண்டு, நிரம்பி - (மங்கைப்
பருவம்) நிரம்பி, நீள்கைதைவேலி - நீண்ட தாழையாகிய வேலியையுடைய.
நெய்தல்சூழ் - நெய்தனிலத்தைச் சூழ்ந்த, காவில் வைகி - சோலையில்
தங்கி எ - று.

     அரம்பை முதலியன மகளிரின் குறங்கு முதலியவற்றிற்கு உவம
மாவன ஆகலானும், அவை அம்மருங்குளவாகலானும் அவற்றையே
உறுப்புக்களாகக் கூறினார். ஆக என்பது விகாரமாயிற்று. (9)

பன்மலர் மாலை வேய்ந்து பானுரைப் போர்வை போர்த்துத்
தென்மலைத் தேய்ந்த சாந்த மான்மதச் சேறு பூசிப்
பொன்மணி யாரந் தாங்கிப் பொருநையாங் கன்னி முந்நீர்த்
தன்மகிழ் கிழவ னாகந் தழீஇக்கொடு கலந்த தன்றே.


     (பா - ம்.) * மென்முலையா.