I


370திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) என்ற நாதன்மேல் - என்று கூறியருளிய தலைவனிடத்தில்,
அன்பையும் உயிரையும் இருத்தி - தம் அன்பையும் ஆவியையும் வைத்து,
ஆயம் சூழ - மகளிர் கூட்டம் புறஞ்சூழ, குன்றம் அன்ன தேர் மேற்கொடு
- மலையினை ஒத்த தேரின்மேல் ஏறியருளி, தூரியம், தூரியம் குரை கடல்
என ஆர்ப்ப - வாத்தியங்கள் ஆர்க்கின்ற கடலினைப்போல ஒலிக்க, நின்ற
தெய்வமால் வரைகளும் - இடை நின்ற தெய்வத்தன்மை பொருந்திய
பெரியமலைகளையும், புண்ணிய நீத்தமும் நீத்து ஏகி - புண்ணிய நதிகளையுங்
கடந்து சென்று, மதிக்குல விளக்கு அன்னாள் - திங்கள் மரபிற்கு விளக்குப்
போல்பவராகிய தடாதகைப் பிராட்டியார், மன்றல் மா மதுராபுரி
அடைந்தனள் - மணம் மிக்க பெருமையுடைய மதுரையம்பதியை அடைந்தார்
எ - று.

     மன்றல் - மலர் மணமும், கல்யாணமும் ஆம். குலத்தை விளங்கச்
செய்தலின் விளக்கன்னாள் என்றார். (46)

மங்கை நாயகி மங்கல மெதிர்கொள
     வந்து வானிழி செல்வம்
பொங்கு மாளிகை புகுந்தன ளாகமேற்
     புதுமணத் திறந்தீட்டி
எங்கு மோலையுய்த் தமைச்சர்மங் கலவினைக்
     கியைவன வமைக்கின்றார்
அங்கண் மாநக ரெங்கணுங் கடிமுர
     சானைமே லறைவித்தார்.

     (இ - ள்.) மங்கை நாயகி - மங்கையர்க் கரசியாகிய பிராட்டியார்,
மங்கலம் எதிர்கொள வந்து - எட்டு மங்கலமும் ஏந்தியவர்கள் எதிர்
கொள்ள வந்து, வான் இழி செல்வம் பொங்குமாளிகை புகுந்தனள் ஆக -
வானுலகத்தி னின்றும் உய்த்த செல்வம் மிக்க திருமாளிகையிற்
புகுந்தருளினார்; மேல் - பின், புதுமணத்திறம் தீட்டி எங்கும் ஓலை உய்த்து
- கடிமணச் செயலை எழுதி எவ்விடங்கட்கும் ஓலை அனுப்பி, அமைச்சர்
மங்கல வினைக்கு இயைவன அமைக்கின்றார் - மந்திரிகள் மண விழாவுக்குப்
பொருந்துவன சமைப்பவர்கள், அம் கண் மா நகர் எங்கணும் - அழகிய
இடத்தினையுடைய பெரிய நகர் முழுதும், கடி முரசு ஆனைமேல்
அறைவித்தார் - மணமுரசினை யானையின்மே லேற்றிச் சாற்றுவித்தார்கள்
எ - று.

     வான் இழிசெல்வம் - தாம் முன்பு வென்று கைப்பற்றிக் கொணர்ந்த
செல்வம். ஆக : அசை; புகுந்தருள என எச்சமுமாம். அமைக்கின்றாராகிய
அமைச்சரென்க. யானை, ஆனையெனத் திரிந்தது. (47)

            [- வேறு]
கன்னிதன் மணமுர சறைதலுங்
     கடிநக ருறைபவர் கரைகெடத்
துன்னிய வுவகையர் கடவுளைத்
     தொழுகைய ருடல முகிழ்ப்பெழப்