பன்னிய துதியின ரியலெழின்
மகளிரை யழகுசெய் பரிசென
இன்னிய லெழில்வள நகரெலாஞ்
செயல்வினை யணிபெற வெழில்செய்வார். |
(இ
- ள்.) கன்னி தன் மணம் முரசு அறைதலும் - பிராட்டியாரின்
திருமண முரசு அறையப்பெற்ற வளவில், கடிநகர் உறைபவர் - காவலை
யுடைய அம் மதுரைப் பதியில் வசிப்பவர் அனைவரும், கரைகெட துன்னிய
உவகையர் - எல்லையில்லாது - ஓங்கிய மகிழ்ச்சியை யுடையவராய்,
கடவுளைத் தொழு கையர் - இறைவனை வணங்கிக் கூப்பிய கையினை
யுடைணவராய், உடலம் முகிழ்ப்பு எழ - உடல் முழுதும் புளகம் அரும்ப,
பன்னிய துதியினர் - பாடிய துதிப்பாட்டுக்களை யுடையவராய், இயல் எழில்
மகளிரை அழகுசெய் பரிசென - இயற்கை யழகுள்ள மகளிரை
அணிமுதலியவற்றால் செயற்கை யழகு செய்யுந் தன்மை போல, இன் இயல்
எழில் வள நகர் எலாம் - இனிய இயற்கையழகும் வளப்பமுமுடைய நகர்
முழுதையும், செயல்வினை அணிபெற - செய்தலை யுடைய தொழிற்
றிறங்களால் அலங்காரம் பெற, எழில் செய்வார் - அழகுசெய்யத்
தொடங்குவார்கள் எ - று.
மணத்தை
முரசு அறைதலும் என்றுமாம். தொழுகையர் - தொழு
தலையுடையவர், தொழும் கையினை யுடையவர் என இருவகையாற் பொருள்
கூறலாகும். உடலம், அம் : சாரியை. இயல் - இலக்கணமுமாம். இங்கே கூறிய
உவமம் பாராட்டற் குரியது. (48)
கோதையொ டும்பரி சந்தனக் குப்பை களைந்தனர் வீசுவார்
சீதள மென்பனி நீர்கடூய்ச் சிந்தின பூமி யடக்குவார்
மாதரு மைந்தரு மிறைமகள மன்றல் மகிழச்சி மயக்கினாற்
காதணி குழைதொடி கண்டிகை கழல்வன தெரிகிலதொழில் செய்வார். |
(இ
- ள்.) மாதரும் மைந்தரும் - மகளிரும் ஆடவரும், கோதை
யொடும் பரி சந்தனக்குப்பை - மாலையோடும் நீங்கிய சந்தனக்குப்பைகளை,
களைந்தனர் வீசுவார் - களைந்து (புறத்தே கொண்டுபோய்) எறிவார்கள்,
சீதளம் மென் பனி நீர்கள் தூய் - குளிர்ந்த மெல்லிய பனிநீரைத் தெளித்து,
சிந்தின பூமி அடக்குவார் - சிதறிய புழுதியை அடக்குவார்கள்; இறைமகள்
மன்றல் மகிழ்ச்சி மயக்கினால் - அரச குமாரியாகிய பிராட்டியாரின்
திருமணங் காரணமாக எழுந்த மகிழ்ச்சி மயக்கத்தால்; காது அணிகுழை -
காதில் அணிந்த குழைகளும், தொடி - வளைகளும், கண்டிகை -
கண்டிகைகளு மாகிய இவைகள், கழல்வன தெரிகிலர் தொழில் செய்வார் -
கழலுதலைத் தெரியாதவர்களாய் அலங்காரம் செய்வார்கள் எ - று.
பரி
என்பதனைக் கோதைக்குங் கூட்டுக. பரிதல், நீங்குதல் எனத்
தன்வினையும், நீக்குதல் எனப் பிறவினையுமாகும். களைந்தனர்கள், தெரிகிலர் :
முற்றெச்சங்கள். நீர், கள் : இசைநிறை; விகுதியாயின் நீரின்வகை கருதிற்றாம்.
இறைமகன் - அரசன் புதல்வியும், அரசியும் ஆம். கண்டிகை - கழுத்தணி. (49)
|