மங்கல மென்றென வினவுவார்
வருமதி நாளென வுரைசெய்வார்
தங்களை யொல்லை தழீஇக்கொள்வார்
தாங்கரு மோகை தலைக்கொள்வார்
திங்களி னெல்லையு மாறுநா
ளாறுக மென்று செலுத்துவார்
நங்கை யருங்கடி காணவோ
துடித்தன தோள்க ணமக்கென்பார். |
(இ
- ள்.) மங்கலம் என்று என வினவுவார் - திருமணம் எப்பொழுது
என்று (ஒருவரை ஒருவர்) கேட்பார்கள்; வரும் மதிநாள் என - வருகின்ற
திங்கட் கிழமை என்று, உரைசெய்வார் தங்களை - கூறுகின்றவர்களை,
ஒல்லை தழீஇக்கொள்வார் - விரையத் தழுவிக் கொள்பவர்களாய், தாங்கரும்
ஓகை தலைக் கொள்வார் - தாங்குதற்கரிய மகிழ்ச்சி மீக்கொள்வார்கள்;
திங்களின் எல்லையும் ஆறுநாள் - அம் மதி நாள் வருமளவு ஆறுநாள்
(ஆயினும் அவற்றை), ஆறு உகம் என்று செலுத்துவார் - ஆறு
யுகங்களைப்போலக் கழிப்பார்கள்; நங்கை அருங்கடி காணவோ - நம்
பிராட்டியாரின் திருமண விழாவைக் காணுதற் பொருட்டோ, நமக்குத்
தோள்கள் துடித்தன என்பார் - நமக்குத் தோள்கள் துடித்தன என்று
கூறுவார்கள் எ - று.
உரை
செய்வார்; தாங்கள் ஒருவரை யொருவர் தழுவிக் கொள்வார்,
எனப் பிரித் துரைத்தலுமாம். ஓகை - உவகை. உடன்காணும் அவாவினால்
ஒருநாள் ஒரு யுகம் போலாயிற்று என்றார். தோற் துடித்தல் ஆடவர்க்கு
வலமும் மகளிர்க்கு இடமும் ஆம். பிராட்டி இறைவனைச் சந்தித்து
மீண்டநாளும் திங்கட்கிழமையெனக் கொள்க. (50)
பித்திகை வெள்ளை புதுக்குவார் பெட்புறு வார்களும் பெட்புறச்
சித்திர பந்தி நிறுத்துவார் தெற்றிகள் குங்கும நீவுவார்
வித்திய பாலிகை மென்றழை விரிதலை நீர்நிறை பொற்குடம்
பத்தியின் வேத நிரப்புவார் தோரணம் வாயில் பரப்புவார். |
(இ
- ள்.) பித்திகை வெள்ளை புகுக்குவார் - சுவர்த்தலங்களைச்
சுண்ணத்தாற் புதுப்பிப்பார்கள்; உறுவார்களும் பெட்புற - (யாவரும்)
விரும்புகின்ற சிற்பநூல் வல்லாரும் விரும்புமாறு, சித்திர பந்தி நிறுத்துவார் -
சித்திர வரிசைகளை நிற்பிப்பார்கள்; தெற்றிகள் குங்குமம் நீவுவார் -
திண்ணைகளைக் குங்குமக் குழம்பால் மெழுகுவார்கள்; வேதி -
அத்திண்ணைகளில், வித்திய பாலிகை - முளைத்த பாலிகைகளையும்,
மென்தழை விரிதலை நீர் நிறை பொன் குடம் - மெல்லிய (மாந்) தழை
விரிந்த தலையையுடைய நீர் நிரம்பிய பொன்னாலாகிய பூரண
கும்பங்களையும், பத்தியின் நிரப்புவார் - வரிசைப்பட வைப்பார்பள்;
தோரணம் வாயில் பரப்புவார் - தோரணங்களை வாயிலிற் கட்டுவார்கள்
எ - று.
வித்திய
- விதைத்த; முளை தோன்றிய. (51)
|