நீளிடை மணிமறு கெங்கணு
நெடுநடைக் காவண நாட்டுவார்
பாளைகொள் கமுகு சுவைக்கழை
பழுக்குலை வாழை யொழுக்குவார்
கோளிறை கொண்டென வாடிகள்
கோத்தணி வார்மிசை கொடிநிரை
வாளரி யெழுபரி யடிபட
மத்திகை நிரையென வைப்பரால்.
|
(இ
- ள்.) நீள் இடை மணி மறுகு எங்கணும் - நீண்ட இடத்தினை
யுடைய அழகிய வீதிகள் முழுதும். நெடுநடைக் காவணம் நாட்டு வார் -
நெடிய நடைப் பந்தர் இடுவார்கள்; பாளைகொள் கமுகு - பாளைகளை
யுடைய பாக்கு மரங்களையும், சுவைக்கழை - சுவையினையுடைய
கரும்புகளையும், பழுக்குலை வாழை - பழுத்த குலையையுடைய வாழை
மரங்களையும், ஒழுக்குவார் - வரிசையாகக் கட்டுவார்கள்; கோள் இறை
கொண்டென - ஒன்பது கோள்களும் தங்கியிருத்தல் போல, ஆடிகள்
கோத்து அணிவார் - கண்ணாடிகளைக் கோவையிட்டுக் கட்டுவார்கள்;
மிசை - மேலே, வாள் அரி எழு பரி அடிபட - ஒளியை யுடைய
சூரியனுடைய ஏழு குதிரைகளும் அடிபடுமாறு, மத்திகை நிரை என -
சம்மட்டியின் வரிசைபோல, கொடி நிரை வைப்பர் - கொடிகளை வரிசையாக
நிறுத்துவார்கள் எ - று.
இறைகொள்ளல்
- தங்கல்; குடியிருத்தல். கொண்டென -
கொண்டாலென. வாளரி, அரி யென்னும் பலபொரு ளொருசொல்
அடையானும் சார்பானும் ஞாயிற்றை யுணர்த்திற்று. மத்திகை - குதிரைச்
சம்மட்டி. ஆல் : அசை. (52)
பூவொடு தண்பனி சிந்துவார் பொரியோடு பொற்சுணம் வீசுவார்
பாவை விளக்கு நிறுத்துவார் பைந்தொடை பந்தரி னாற்றுவார்
ஆவண மென்ன வயிர்ப்புற வணிமறு கெங்கணு மரதனக்
கோவையு மரகத மாலையுங் கோப்பமை யாரமுந் தூக்குவார். |
(இ
- ள்.) பூவொடு தண்பனி சிந்துவார் - மலர்களோடு குளிர்ந்த பனி
நீரைத் தெளிப்பார்கள்; பொரியோடு பொற்சுணம் வீசுவார் - பொரிகளோடு
பொன்னாலாகிய பொடியை இறைப்பார்கள்; பாவை விளக்கு நிறுத்துவார் -
பாவை விளக்குக்களை நிற்க வைப்பார்கள்; பைந்தொடை பந்தரில் நாற்றுவார்
- பசிய மாலைகளைக் காவணங்களில் கட்டித் தொங்கவிடுவார்கள்; ஆவணம்
என்ன அயிர்ப்பு உற - கடை வீதியோ என்னக் (கண்டோர்) ஐயுறுமாறு,
அணிமறுகு எங்கணும் - அழகிய வீதிகளெங்கும். அரதனக் கோவையும் -
அரதன மாலைகளையும், மரகத மாலையும் - மரகத மாலைகளையும், கோப்பு
அமை ஆரமும் - கோவையாக அமைந்த முத்துமாலைகளையும், தூக்குவார் -
நிரல்படத் தொங்க விடுவார்கள் எ - று.
பனி
- பனிநீர். சுண்ணம் என்பது தொக்கது. பாவை விளக்கு - பெண்
வடிவாகிய பிரதிமை கையில் விளக்கினை யேந்தி நிற்குமாறு இயற்றப்பட்டது.
|