I


திருமணப் படலம்375



அஞ்சனம் வேல்விழி தீட்டுவா ராடவர் மார்விடை நாட்டுவார்
பஞ்சுகன் பாத மிருத்துவார் பரிபுர மீது திருத்துவார்
வஞ்சியர் தேற லருந்துவார் மருங்கு றளாட வருந்துவார்
கொஞ்சிய கனிமொழி கழறுவார் குழுவொடு குரவைகள் குழறுவார்.

     (இ - ள்.) வஞ்சியர் - வஞ்சிக் கொடிபோலும் மகளிர்கள், வேல் விழி
அஞ்சனம் தீட்டுவார் - வேல் போன்ற கண்களுக்கு மை எழுது வார்கள்;
ஆடவர் மார்பிடை நாட்டுவார் - (அவற்றை) ஆடவர்களின் மார்பிலே
ஊன்றுவார்கள்; பாதம் பஞ்சுகள் இருத்துவார் - அடிகளில் செம்பஞ்சுக்
குழம்பை இடுவார்கள்; மீது பரிபுரம் திருத்துவார் - அவ்வடிகளின்மேல்
சிலம்பைத் திருந்த அணிவார்கள்; அதறல் அருந்து வார் - மதுவினைக்
குடிப்பார்கள்; மருங்குல் தள்ளாட வருந்துவார் - (அம் மயக்கத்தால்)
இடைதள்ளாட (நடந்து) வருந்துவார்கள்; கொஞ்சிய கனிமொழி கழறுவார் -
(நாயகர்) பாராட்டச் சுவை முதிர்நத் மொழிகளைக் கூறுவார்கள்; குழுவொடு
குரவைகள் குழறுவார் - மகளிர் கூட்டத்தோடு குரவைப் பாட்டினைக் குழறிப்
பாடுவார்கள் எ - று.

     தீட்டுவார், இருத்துவார், அருந்துவார் என்பவற்றை எச்சமாக்கலுமாம்.
தள்ளாட என்பது விகாரமாயிற்று. கொஞ்சிய : செய்யிய வென்னும் வினை
யெச்சம்; கொஞ்சுதலையுடைய வெனப் பெயரெச்சமுமாம். குரவை -
கைகோத்தாடுங் கூத்து; இது காமமும் வென்றியும் பொருளாக வரும்;

"குரவை யென்பது கூறுங் காலைச்
செய்தோர் செய்த காமமும் விறலும்
எய்த வுரைக்கு மியல்பிற் றென்ப"

என்பது காண்க. நான்கடியிலும் மூன்றாஞ் சீரும் ஆறாஞ் சீரும் இயை
புடையவாய்த் திகழ்கின்றன. (56)

கின்னர மிதுனமெ னச்செல்வார் கிளைகெழு பாணொடு விறலியர்
கன்னிய ராசை வணங்குவார் கடிமண மெய்து களிப்பினால்
இன்னிசை யாழொடு பாடுவா ரீந்தன துகில்விரித் தேந்துவார்
சென்னியின் மீதுகொண்டாடுவார் தேறலை யுண்டு செருக்குவார்.

     (இ - ள்.) விறலியர் - பாண்மகளிர், கிளை கெழு பாணொடு -
சுற்றமாகிய பாணரோடு, கின்னர மிதுனம் எனச் செல்வார் - யாழேந்திய
மிதுனராசியைப்போலச் சென்று, கன்னியர் அரசை வணங்குவார் -
மங்கையர்க் கரசியான பிராட்டியாரை வணங்குவார்கள், கடிமணம் எய்து
களிப்பினால் - திருமணம் நிகழும் மகிழ்ச்சியால், இன் இசை யாழொடு
பாடுவார் - இனிய இசைப்பாட்டினை யாழொடு (வேறுபடாமல்) பாடுவார்கள்;
ஈந்தன துகில் விரித்த ஏந்துவார் - (அவர்) கொடுக்கும் பொருள்களை
ஆடையை விரித்து வாங்குவார்கள்; சென்னியின் மீது கொண்டு ஆடுவார் -
அவற்றை முடியின்மேற் கொண்டு ஆடுவார்கள்; தேறலை உண்டு
செருக்குவார் - மதுவை உண்டு களிப்பார்கள் எ - று.