கின்னரம்
- வீணை. வீணையைக் கையிலேந்திய ஆணும் பெண்ணும்
கூடிய வடிவாக விருப்பது மிதுனராசி யென்ப. கின்னர மிதுனம் - ஆணும்
பெண்ணுமாகிய இசையறியும் கின்னரப் பறவைகள் என்னலுமாம்;
"பாடுகின்றன
கின்னர மிதுனங்கள் பாராய்" |
என்பது இராமாயணம்.
கிளை யென்றது கணவரை. பாண் - பாணர்.
பாரணராற்றுப்படையைப் பாணாற்றுப்படையெனலுங் காண்க. விறலியர் -
பாணர், கூத்தர், பொருநர் என்போரின் பெண்பாலார்; விறல் பட ஆடுதலின்
விறலியர் எனப்பட்டார்; விறல் - சத்துவம்; மெய்ப்பாடு. இன்னிசை -
மிடற்றுப் பாடல். ஈந்தன : பெயர். கிளை கெழு பாணொடு என்பதற்கு
வீனையின் நரம்பி லெழுந்த இசையோடு என்று பொருள் கூறுதல் சிறவாமை
யுணர்க. (57)
மன்னவர் மகளிரு மறையவர்
மகளிரும் வந்துபொன் மாலையைத்
துன்னினர் சோபனம் வினவுவார்
கோதைதன் மணவணி நோக்குவார்
கன்னித னேவலர் வீசிய
காசறை கர்ப்புர வாசமென்
பொன்னருங் கலவையின் மெய்யெலாம்
புதைபட வளனொடும் போவரால். |
(இ
- ள்.) மன்னவர் மகளிரும் - அரசர் மகளிரும், மறையவர்
மகளிரும் - பார்ப்பன மாதரும், பொன் மாலையை வந்து துன்னினர் -
காஞ்சன மாலையை வந்து பொருந்தி, சோபனம் வினவுவார் - திருமண
விழாவை உசாவுவார்கள் : தோகை தன் மண அணி நோக்குவார் -
பிராட்டியாரின் திருமணக் கோலத்தைக் கண்டுகளிப்பார்கள்; கன்னி தன்
ஏவலர் வீசிய - அப் பிராட்டியாரின் ஏவலர்கள் வீசிய, காசறை -
மயிர்ச்சாந்து, கர்ப்புரவாசம் மென்பொன் நறுங் கலவையின் - பச்சைக்
கர்ப்புரமணங்கலந்தமெல்லிய பொன்னிறமுள்ள நறியகலவை ஆகிய
இவைகளால், மெய் எலாம் புதைபட - உடல்முழுதும் மறைய, வளனொடும்
போவர் - மகிழ்ச்சியோடும் தங்கள் மனைகட்குச் செல்வார்கள் எ - று.
சோபனம்
- சுபம்; மங்கலம். வீசிய - சொரிந்த; வழங்கிய, காசறை -
மயிர்ச்சாந்து; இன்னுருபை இதனொடுங் கூட்டுக. வளன் : ஈண்டு மகிழ்ச்சி.
துன்னினர் : முற்றெச்சம். ஆல் : அசை. (58)
அங்கன கஞ்செய் தசும்பின வாடை பொதிந்தன தோடவிழ்
தொங்கல் வளைந்தன மங்கையர் துள்ளிய கவரியி னுள்ளன
கங்கையும் வாணியும் யமுனையுங்காவிரி யும்பல துறைதொறு
மங்கல தூரிய மார்ப்பன மதமலை மேலன வருவன. |
|