I


திருமணப் படலம்377



     (இ - ள்.) கங்கையும் - கங்கை நீரும், வாணியும் - வாணி நீரும்,
யமுனையும் - யமுனைநீரும், காவிரியும் - காவிரி நீரும், பலதுறை தொறும்
- பல துறைகளிலுமிருந்து, அம் கனகம்செய் தசும்பின - அழகிய பொன்னாற்
செய்த குடத்தில் நிறைக்கப்பெற்றனவாய், ஆடை பொதிந்தன - துகிலாற்
போர்க்கப் பெற்றனவாய், தோடு அவிழ் தொங்கல் வளைந்தன - இதாகள்
விரிந்த மாலைகளால் வளைந்தணியப்பட்டனவாய், மங்கையர் துள்ளிய
கவரியின் உள்ளன - மகளிர் வீசும் சாமரையினுள் அடங்கியனவாய், மதமலை
மேலன - மதத்தையுடைய மலைபோன்ற யானையின் மத்தகத்திலுள்ளனவாய்,
மங்கலதூரியம் ஆர்ப்பன வருவன - மங்கல இயங்கள் ஒலிக்கப்பெற்றனவாய்
வாரா நிற்பன எ - று.

     தசும்பின முதலியன முற்றெச்சங்கள். துள்ளுமாறு வீசிய என்பதனைத்
துள்ளிய என்றார் வாணி - சரச்சுவதி. யமுனை - காளிந்தி. துறை - தீர்த்தக்
கட்டம். துறைதொறு மிருந்து என விரிக்க. (59)

அங்கவர் மனைதொறு மணவினை யணுகிய துழனிய ரெனமறைப்
புங்கவ ரினிதுண வறுசுவைப் போனக மடுவினை புரிகுவார்
இங்கடு வனபலி யடிகளுக் கெனயதி களையெதிர் பணிகுவார்
சங்கர னடியரை யெதிர்கொள்வார் சபரியை விதிமுறை புரிகுவார்.

     (இ - ள்.) அங்கவர் - அந்நகரத்தவர், மனைதொறும் மனவினை
அணுகிய துழனியர் என - (தத்தம்) வீடுகள் தோறும் மணச்செயல்கள் வந்த
ஆரவாரத்தை யுடையார் போன்று, மறைப்புங்கவர் இனிது உண - வேத
உணர்ச்சியையுடைய தூய மறையவர்கள் இனிதாக அருந்துமாறு, அறுசுவைப்
போனகம் அடுவினை புரிகுவார் - அறுவகைச் சுவையினையுடைய
உண்டிகளைச் சமைப்பார்கள்; அடிகளுக்கு பலி இங்கு அடுவன என -
தேவரீருக்குத் திரு அமுதுகள் இங்கே சமைக்கப்படுவன என்று, யதிகளை
எதிர் பணிகுவார் - துறவிகளை எதிர் சென்று வணங்குவார்கள்; சங்கரன்
அடியரை எதிர் கொள்வார் - சிவனடியார்களை எதிர்கொண்டு, சபரியை
விதிமுறை புரிகுவார் - பூசனையை விதிப்படி செய்வார்கள் எ - று.

     அணுகினமையாலான துழனியரென வென்க. அடுவினை புரிகுவார்,
அடுதலாகிய வினையைப் புரிகுவார் என விரியும். பலி - பிச்சை;
துறந்தோர்க்கிடுவது. யதி - துறவி. சபரியை - பூசை. (60)

இன்னண நகர்செய லணிசெய
     விணையிலி மணமகன் மணவினைக்
கன்னியு மனையவ ளென்னினிக்
     கடிநகர் செயுமெழில் வளனையாம்
என்னவ ரியநகர் செயலெழி
     லிணையென வுரைசெய்வ தெவனிதன்
முன்னிறை மகடமர் மணவணி
     மண்டப வினைசெயு முறைசொல்வாம்.

     (இ - ள்.) இன்னணம் நகர் செயல் அணி செய - இவ்வாறு
அப்பதியைச் செயற்கை யழகு செய்யாநிற்க. மணமகன் இணை - இலி -