(இ
- ள்.) இவர் சிறு மகளிர் - இவ்வணிகரின் சிறுமிகள்,
மரகதத்தினால் அம்மிகள் - மரகதங்களால் அம்மிகளும் குழவிகளும், வாள்
வைரம் உலக்கை உரல்கள் - ஒளிபொருந்தி வைரங்களால் உலக்கைகளும்
உரல்களும், வெள்ளியால் அடுப்பு - வெள்ளியினால் அடுப்பும் (அமைத்து),
அகில் விறகு - அகிற் கட்டையை விறகாகவும், உலை பனிநீர் - பனிநீரை
உலைநீராகவும், முத்து அரிசி - முத்துக்களை அரிசியாகவும், செம்மணி
அழல் - சிவந்த மாணிக்கத்தை நெருப்பாகவும் (கொண்டு), அடுகலன
பிறவும் - பிற சமையற் கலன்களனைத்தையும், எரிபொனால் -
ஒளியினையுடைய பொன்னால், இழைத்து - இயற்றி ஆடுப - விளையாடுவர்
எ - று.
அம்மிகள்
என்புழி இனம்பற்றிக் குழவியும் கொள்ளப்பட்டது. வாளால்
என விரிக்க. உலக்கையுரல்கள் உம்மைத் தொகை. அமைத்து, கொண்டு
என்னுஞ் சொற்கள் இயைபு நோக்கி வருவிக்கப்பட்டன. (64)
செயிரிற் றீர்ந்தசெம் பொன்னினாற் றிண்ணிலைக் கதவம்
வயிரத் தாழுடைத் தவர்கடை வாயிலு மென்றால்
அயிரிற் றீர்ந்தபே ரறிஞரு மனையர்தஞ் செல்வத்
தியலிற் றாமென வரையறுத் திசைப்பதை யெவனோ. |
(இ
- ள்.) அவர் கடைவாயிலும் -அவ்வணிகரின் கடைவாயிலும்,
செரில் தீர்ந்த - குற்றத்தினீங்கிய,ய செம்பொன்னினால் - சிவந்த
பொன்னினால், திண்நிலைக் கதவம் - வலிய நிலையோடு கூடிய கதவும்,
வயிரத்தாழ் - (அதற்கு) வயிரத்தினால் தாழக்கோலும், உடைத்து என்றால்
- உடையது என்று சொன்னால், அயிரில் தீர்ந்த பேர் அறிஞரும
-ஐயத்தினீங்கிய பெரிய அறிஞர்களும், அனையர் தம் - அவ்வணிகருடைய,
செல்வத்து இயல் - செல்வத்தினளவு, இற்று ஆம் என - இவ்வளவின
தென்று, வரையறுத்து - முடிவுகட்டி, இசைப்பது எவன் - கூறுவது
எவ்வாறு? (முடியாது என்றபடி) எ - று.
செயிரிற்றீர்ந்த
பொன் - ஓட்டற்றபொன். வாயில் உடைத்து எனக்
கூட்டுக. ஐயத்தினீங்கிய பேரறிஞராவார் ஆதித்தனது செலவு முதலிய
வற்றையும் அறியும் அறிவினையுடையார்.
"செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமு மென்றிவை
சென்றந் தறிந்தோர் போல வென்றும்
இனைத்தென் போரு முளரே" |
என்னும் புறப்பாட்டும்
காண்க. வாயிலும், அறிஞரும் என்னும் உம்மைகள்
முறையே இழிவையும் உயர்வையும் சிறப்பிக்க வந்தன. தம், ஆம் : சாரியை.
இசைப்பதை : வினைத்திரி சொல், ஐ : சாரியை என்னலுமாம்.
ஓ : அசை.(65)
|