பளிக்கி னேழுயர் களிறுசெய்
தமைத்தபொற் படியது பசுஞ்சோதி
தெளிக்கு நீலத்தி னாளிக
ணிரைமணித் தெற்றிய துற்றோர்சாய்
வெளிக்கு ளாடிய வோவியப்
பாவைபோன் மிளிர்பளிங் காற்சோதி
தளிர்க்கும் பித்திய திடையிடை
மரகதச் சாளரத் ததுமாதோ. |
(இ
- ள்.) ஏழு உயர் களிறு - ஏழு முழம் உயர்ந்த யானைகளை,
பளிக்கின் செய்து அமைத்த - பளிங்கினாற் செய்து இருபாலும் அமைத்த,
பொன் படியது - பொன்னாலாகிய படிகளையுடையதும், பசும்சோதி
தெளிக்கும் - பசிய ஒளியை வீசும், நீலத்தின் ஆளிகள் நிரை - நீல மணியாற் செய்த
ஆளிகளின் வரிசையை யுடைய, மணித் தெற்றியது - மணிகளழுத்திய
திண்ணைகளை யுடையதும், உற்றோர் சாய் - நெருங்கினவர்களின் சாயல்,
வெளிக்குள் ஆடிய ஓவியம் பாவை போல் மிளிர் - வெளிப்புறத்தில்
ஆடுகின்ற ஓவியப்பிரதிமைகள் போல விளங்கப்பெற்ற, பளிங்கால் சோதி
தளிர்க்கும் பித்தியது - பளிங்கினாலாகிய ஒளி வீசும் கூசர்த்தலங்களை
யுடையதும், இடை இடை மரகதச் சாளத்தது - இடை யிடையே
மரகதத்தாலாகிய சாளரங்களையுடையதும் எ - று.
ஏழு
- ஏழு முழத்திற்காயிற்று : ஏழ் என மெய்யீறாகத்
தொல்காப்பியனாரும், ஏழு என உயிரீறாக
நன்னூலாரும் கொண்டனர்.
ஏழு முழ உயரமும் ஒன்பது முழ நீளமும் உடைத்தாதல் அரசயானையின்
இலக்கணம் சாய் - சாயல். வெளிக்குள் : உள் ஏழனுருபு. பளிங்கின்
தெளிவும் உற்றோரின் எழிலும் புலப்பட வெளிக் குளாடிய ஓவியப்
பாவைபோல் என உவமங் கூறினார். மாது ஓ : அசைகள். (63)
பல்லுருச் செய்த பவளக்கா லாயிரம் படைத்ததிந் திரநீலக்
கல்லு ருத்தலைப் போதிய தாடகக் கவின்கொளுத் தரமேல
தல்லு ருக்கிய செம்மணித் துலாத்ததா லமுதுடற் பசுந்திங்கள்
வில்லு ருக்குகன் மாடம தாகிய வேள்விமண் டபஞ்செய்தார். |
(இ
- ள்.) பல் உருச் செய்த பவளக்கால் ஆயிரம் படைத்தது -
பலவடிவங்களாகச் செய்த ஆயிரம் பவளத் தூண்களை உடையதும், தலை
- அவற்றின்மேல், இந்திர நீலக்கல் உருப் போதியது - இந்திர நீலமணிகளால்
வடிவு பொருந்தச் செய்த போதிகைகளை உடையதும், ஆடகம் கவின் கொள்
உத்தரம் மேலது - பொன்னாற் செய்த அழகிய உத்தரங்களையுடையதும்,
அல் உருக்கிய - இருளை ஒட்டிய, செம்மணி துலாத்தது - மாணிக்க
மணிகளாற்செய்து துலாங்களையுடையதும், அமுது உடல் பசுந்திங்கள் -
அமுத வுடம்பினையுடைய குளிர்ந்த மதியினது, வில் உருக்கு கல் மாடமது.
கிரணங்களினால் உருக்கப்படுகின்ற சந்திர காந்தக் கல்லாற் செய்த
மேனிலையை உடையதும், ஆகிய வேள்வி மண்டபம் செய்தார் - ஆகிய
திருமண மண்டபத்தைச் செய்தமைத்தார்கள் எ - று.
|