I


38திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) பொருநை ஆம் கன்னி - அந்தப் பொருநையாகிய
கன்னி, பன்மலர் மாலைவேய்ந்து - பலமலர் மாலைகளை அணிந்து, பால்
நுரைப் போர்வை போர்த்து - வெள்ளிய நுரையாகிய போர்வையைப்
போர்த்து, தென்மலை தேய்ந்த - பொதியின்மலையி லரைபட்ட, சாந்தம்
மான்மதச் சேறுபூசி - சந்தனத்தோடு கலந்த கத்தூரிக் குழம்பை அணிந்து,
பொன்மணி ஆரம் தாங்கி - பொன்னாலும் மணியாரு மியன்ற ஆரங்களைத்
தாங்கி, மகிழ - மகிழ்ச்சியைச் செய்கின்ற முந்நீர் - கடலாகிய, தன் கிழவன்
ஆகம் - தன் தலைவன் மார்பை, தழீஇக்கொடு காலத்தும் - தழுவிக்க
கொண்டு கலந்தது எ - று.

     மலர்மாலை - மலராற் றொடுத்தமாலை, மலர் வரிசை. மாலை
வேய்தல் முதலியன கலவியின் பொருட்டு. கலவிக் காலத்து மெல்லிய
வெண்டுகி லுடுத்தலை ‘பட்டுநீக்கித் துகிலுடுத்து’ என்னும் பட்டினப்
பாலை
யடியானறிக. மணியாரம் - மணியானியன்ற ஆரம், மணியும்
முத்தும். முந்நீர், ‘நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய
மூன்று தொழிலுமுடைமையின்’ கடலுக்கு ஆகுபெயரென்பர்
நச்சினார்க்கினியர்.
"யாற்றுநீரும் ஊற்றுநீரு மழைநீரு உடைமையால்
கடற்கு முந்நீ ரென்று பெயராயிற்று." என்பர் புறநானூற்றுரைகாரர். இவை
மூன்றுபாட்டுங் குளகம். குழவி மங்கையாய் நிரம்பினமை கூறிப் பின் கன்னி
யென்பதனை எழுவாயாக நிறுத்திக் கலந்ததென்னும் பயனிலையால்
முடித்தார். பொருநைக்கியைக் கலந்ததென அஃறிணை வினை கொடுத்தார்.

"திரைபொரு கனைகடற் செல்வன் சென்னிமேல்
நுரையெனு மாலையை நுகரச் சூட்டுவான்
சரவெனும் பெயருடைத் தடங்கொள் வெம்முலைக்
குரைபுனற் கன்னிகொண் டிழிந்த தன்பவே

" என்னுஞ் சிந்தாமணிச் செய்யுள் ஈண்டு நோக்கற்பாலது. (10)

வல்லைதா யிருபால் வைகுஞ் சிவாலய மருங்கு மீண்டி
முல்லையா னைந்துந் தேனுந் திரைக்கையான் முகந்து வீசி
நல்லமான் மதஞ்சாந் தப்பு நறுவிரை மலர்தூய் நீத்தஞ்
செல்லலாற் பூசைத் தொண்டின் செயல்வினை மாக்கள் போலும்.

     (இ - ள்.) நீத்தம் - பொருநை வெள்ளமானது, வல்லைதாய் -
விரைந்து தாவிச் சென்று, இருபால்வைகும் - இருபுறங்களினு முள்ள,
சிவாலய மருங்கு ஈண்டி - சிவாலயங்களிடத்தில் நெருங்கி, முல்லை -
முல்லை நிலத்திலுள்ள, ஆன் ஐந்தும் - ஆவின்பால் முதலிய ஐந்து
கவ்வியங்களையும், தேனும் - தேனையும், திரைக்கையால் - அலைகளாகிய
கைகளால், முகந்துவீசி - மொண்டு வீசியும், நல்ல மான்மதம் - நல்ல
கத்தூரியையும், சாந்து - சந்தனத்தையும், அப்பி - பூசியும்; நறுவிரை
மலர்தூய் - நறிய மணமுள்ள மலர்களைத் தூவியும், செல்லலால் -
செல்லுதலால், பூசைத்தொண்டின் - சிவபூசைத் தொண்டின் செயல் வினை
மாக்கள் போலும் - செயலாகிய வினையையுடைய அடியார்களை ஒக்கும்
எ - று.

     ஆன் ஐந்து - பால், தயில், நெய், கோமயம், கோசலம் என்பன
தேன் முதலியன மலையிலும் காட்டிலுமுள்ளன. தாவி, தூவி என்பன தாய்,
தூய்