I


திருமணப் படலம்381



     (இ - ள்.) பித்தி மாதவி சண்பகம்பாதிரி பிறவும் - சிறுசண்பகம்
குருக்கத்தி சண்பகம் பாதிரி என்பனவும் பிறவும், மண்டபம் சூழ -
அம்மண்டபத்தைச் சூழ, பத்தியா வளர்த்து - வரிசையாக வளர்த்து, அளிகள்
வாய்திறந்து பண்பாட - வண்டுகள் வாயினைத் திறந்து இசை பாடவும்,
இன்மதுக் கால - (மலர்கள்) இனிய மதுவைச் சிந்தவும், தத்தி ஆய் மணம்
கவர்ந்து - (அவற்றுட்) சென்று மென்மையாகிய மணங்களைக்
கொள்ளைகொண்டு, சாளரம் தொறும் தவழ்ந்து ஒழுகு - சாளரங்கள்
தோறும் தவழ்ந்து செல்ருகின்ற, இளந்தென்றல் - இளந் தென்றற் காற்று,
தித்தியா நிற்கு மதுத்துளி தெளித்திட - இனிக்கும் தேன் துளியைத்
தெளிக்கவும், உய்யானம் செய்தனர் - பூங்காவினைச் செய்தமைத்தார்கள்
எ - று.

     பித்தி - பித்திகை; பிச்சி; இதனைச் சிறு சண்பக மென்பர். பாதிரியும்
பிறவும் என்க. பத்தியாக, ஆய் - நுண்மை; சிறப்புமாம். உய்யானம் -
உத்தியானம்;

"உய்யா னத்திடை யுயர்ந்தோர் செல்லார்"

என்பது மணிமேகலை. (66)

வேள்விச் சாலையும் வேதியுங்
     குண்டமு மேகல யொடுதொன்னூற்
கேள்விச் சார்பினாற் கண்டுகண்
     ணடிவிடை கிளர்சுடர் சீவற்சம்
நீள்விற் சாமரம் வலம்புரி
     சுவத்திக நிறைகுட மெனவெட்டு
வாள்விட் டோங்குமங் கலந்தொழில்
     செய்பொறி வகையினா னிருமித்தார்.

     (இ - ள்.) வேள்விச்சாலையும் வேதியும் குண்டமும் மேகலையொடு
வேள்விச் சாலைகளையும் வேதிகைகளையும் ஓமகுண்டங்களையும்
(அவவ்வற்றின்) வரம்புகளோடு, தொல்நூல் கேள்விச் சார்பினால் - பழைய
நூலாகிய வேதத்தின் சார்பினால், கண்டு - செய்து, கண்ணடி விடைகிளர்சுடர்
சீவற்சம் நீள் வில் சாமரம் வலம்புரி சுவத்திகம் நிறைகுடம் என -
கண்ணாடியும் இடபமும் விளாங்கா நின்ற விளக்கும் சீவற்சமும் மிக்க
ஒளியையுடைய சாமரமும் வலம்புரிச் சங்கும் சுவத்திகமும் நிறை குடமும்
என்று சொல்லப்பட்ட, வாள்விட்டு ஓங்கும் எட்டு மங்கலம் - ஒளி வீசிச்
சிறந்த எட்டு மங்கலங்களையும், தொழில் செய் பொறிவகையினால்
நிருமித்தார் - தொழில் செய்கின்ற இயந்திரவகையினால் அமைத்தார்கள்
எ - று.

     வேதி -மேடை. மேகலை - வரம்பு. கேள்வி யென்பது வேதத்திற்கு
ஒரு பெயர்; கேள்வி என்பதற்கு ஆகமமென்றும் ‘சார்பு என்பதற்குச்
சார்புநூலென்றும் கூறினுமாம்; முன் திருநகரங்கண்ட படலத்தில்.

"தென்ன ரன்பினி லகப்படு சித்தர்தா முன்னர்ச்
சொன்ன வாதிநூல் வழிவரு சார்புநூற் றொடர்பால்"