எனக் கூறியிருத்தலுங்
காண்க. நிள்வில் - மிக்க ஒளி. சீவற்சம் - திருமகள்
வடிவாகிய பாவை. சுவத்திகம் - மண்டப வடிவாகியது, இங்கே கூறிய
மங்கலம் எட்டனுள் விடை, சீவற்சம், வலம்புரி, சுவத்திகம் என்பவற்றை
விலக்கி, தோட்டி, முரசு, கொடி, இணைக்கயல் என்பன கூட்டி எட்டெனக்
கொள்ளுதலும் உண்டு; மங்கலம் பதினாறெனலு முண்டாகையால்
இவையெல்லாம் மங்கலமே யாமென்க; பெருங்கதையில்,
"அயின்முளை வாறும்
வயிரத் தோட்டியும்
கொற்றக் குடையும் பொற்பூங் குடமும்
வலம்புரி வட்டமு மிலங்கொளிச் சங்கும்
வெண்க ணாடியுஞ் செஞ்சுடர் விளக்கும்
கவரியுங் கயலுந் தவிசுந் திருவும்
முரசும் படாகையு மரசிய லாழியும்
ஒண்வினைப் பொலிந்த வோமா ரிகையுமென்
றெண்ணிரண் டாகிய பண்ணமை வனப்பிற்
கடிமாண் மங்கலங் கதிர்வளை மகளிர்
முடிமிசை யேந்தி முன்னர் நடப்ப" |
எனப் பதினாறு மங்கலம்
கூறப்பட்டிருத்தல் காண்க. (67)
மணங்கொள் சாந்தொடு குங்குமப்
போதளாய் மான்மதம் பனிநீத்தோய்த்
திணங்கு சேறுசெய் திருநிலந்
தட விவா னிரவிமண் டலநாணப்
பணங்கொ ணாகமா மணவிளக்
கிருகையும் பாவைக ளெடுத்தேந்தக்
கணங்கொ டாரகை யெனநவ
மணிகுயில் கம்பலம் விதானித்தார். |
(இ
- ள்.) மணம் கொள் சாந்தொடு - மணங்கொண்ட சந்தனத்தோடு,
குங்குமப்போது மான் மதம் அளாய் - குங்குமப்பூவையும் மிருக மதத்தையுங்
கலந்து, பனிநீர் தோய்த்து இணங்கு சேறு செய்து - பனி நீரிற் கரைத்து
ஒன்றுபட்ட குழம்பு ஆக்கி, இருநிலம் தடவி - அதனால் பெரிய நிலத்தை
மெழுகி, வான் இரவி மண்டலம் நாண - வானின்கண் உள்ள சூரிய
மண்டலமும், நாணுமாறு, பணம் கொள்நாகம் மாமணி விளக்கு -
படத்தைக்கொண்ட பாம்புகளின் பெரிய மணிகளாகிய விளக்குகளை, இரு
கையும் பாவைகள் எடுத்து ஏந்தா நிற்க, கணம் கொள் தாரகை என -
கூட்டங் கொண்ட உடுக்களைப்போல, நவமணி குயில் கம்பலம் விதானித்தார்
- ஒன்பது வகை மணிகளும் இடை யிடை கோவையாக அமைத்த
கம்பலங்களை மேலே விரித்துக் கட்டினார்கள் எ - று.
இருகையும்
- இரண்டு கரங்களிலும், இரண்டு புறங்களிலும். குயிற்றிய
எனற்பாலது குயில் எனத் தன்வினைப் பகுதியாய் நின்றது. குயிற்றுதல் -
ஈண்டுக் கோவையாக அமைத்தல். விதானித்தார்; விதானம் என்னும்
பெயரடியாக வந்தது. (68)
|