கைகளையும் (பரப்பி),
மேல்நிலம் மூன்றாகப் பொற்ப - (இங்ஙனம்) மேல்
நிலம் மூன்றாக அழகு செய்ய, நூல்வழி பல் மணிகளால் விமானம்
பொலியச்செய்து - சிற்ப நூன் முறைப்படி பல மணிகளால் விமானத்தை
விளங்கச்செய்து, உள்ளாக - அதன் உள்ளிடத்தே எ - று.
வாள்
கொடுமையெனக் கொண்டு, வாளரி - சிங்கம் எனலுமாம்.
துகிரால் ஆகிய, தூண் நிறுத்தி, உத்தரம் விடங்கம் பரப்பி என ஏற்ற
பெற்றி வினைகள் விரிக்கப்பட்டன. விடங்கம் - கொடுங்கை. நிலம் மூன்று -
மூன்றடுக்கு. சதுரமா, மூன்றா என்பன விகாரம். (70)
அங்க மாறுமே கால்களாய்
முதலெழுத் தம்பொற்பீ டிகையாகித்
துங்க நான்மறை நூல்களே
நித்திலந் தொடுத்தசை தாம்பாகி
எங்க ணாயக னெம்பெரு
மாட்டியோ டிருப்பதற் குருக்கொண்டு
தங்கி னாலென நவமணி
குயின்றபொற் றவிசது சமைத்திட்டார். |
(இ
- ள்.) எங்கள் நாயகன் - எங்கள் இறைவனாகிய சோமசுந்தரக்
கடவுள், எம் பெருமாட்டியோடு இருப்பதற்கு - எம் இறைவியாகிய தடாதகைப் பிராட்டியோடு
வீற்றிருப்பதற்கு, அங்கம் ஆறுமே கால்களாய் - ஆறு
அங்கங்களுமே கால்களாகவும், முதல் எழுத்து அம்பொன் பீடிகையாகி -
பிரணவம் அழகிய பொற்பீடமாகவும், துங்கம் நால்மறை நூல்களே - உயர்ந்த
நான்கு வேதங்களாகிய நூல்களே, நீத்திலம் தொடுத்து அசை தாம்பாகி -
முத்தினால் தொடுத்து அசைகின்ற தாம்புகளாகவும், உருக்கொண்டு -
வடிவங்கொண்டு, தங்கினாலென - தங்கினாற் போல, நவமணி குயின்ற
பொன் தவிசு சமைத்திட்டார் - நவரத்தினங்கள் இழைத்த பொற்றவிசு
ஒன்றைச் செய்து அமைத்தார்கள் எ - று.
முதலெழுத்து
- எல்லா வேதங்களுக்கும் மந்திரங்களுக்கும் முதலாகிய
பிரணவ எழுத்து. ஆக என்பன ஆய் எனவும் ஆகி எனவும் திரிந்து நின்றன, குயின்ற - இழைக்கப்பட்ட
: பிறவினைப்பொருள் பயப்பதுமாம். தவிசது :
அது பகுதிப்பொருள் விகுதி. (71)
புரந்த ரன்றரு கற்பகம் பொலந்துகில் பூண்முத லியநல்கச்
சுரந்த ரும்பெற லமுதமை வகையறு சுவையுணா முதலாகப்
பரந்த தெய்வவான் பயப்பச்சிந் தாமணி பற்பல வுஞ்சிந்தித்
திரந்து வேண்டுவ தரத்தர வீட்டினா ரிந்திர னகர்நாண. |
(இ
- ள்.) புரந்தரன் தரு கற்பகம் - இந்திரன் திறையாகத் தந்த
கற்பகத்தரு, பொலம் துகில் பூண்முதலிய நல்க - பொன்னாடை அணி
முதலியவற்றை நல்கவும், தெய்வ ஆன் - காமதேனு, பெறல் அரும் அமுதம்
- பெறுதற்கரிய அமுதமும், அறுசுவை ஐவகை உணாமுதலாக -
அறுசுவையோடு கூடிய ஐந்து வகை உணவும் முதலாக, பரந்த சுரந்து பயப்ப
- மிக்க பல்வகை யுணவுகளையும் சுரந்து கொடுக்கவும், சிந்தித்து இரந்து
|