வேண்டுவ - நினைத்து
இரந்து கேட்பனவாய, பற்பலவும் - பல பல
பொருள்களையும், சிந்தாமணி தரத்தர - சிந்தாமணி தந்துகொண்டிருக்கவும்,
இந்திரன் நகர் நாண ஈட்டினார் - இந்திரனுலகமும் நாணுமாறு (அவற்றை
வாங்கித்) தொகுத்தார்கள் எ - று.
பொலம்
- பொன்;
"பொன்னென்
கிளவி ஈறுகெட முறையின்
முன்னர்த் தோன்றும் லகார மகாரஞ்
செய்யுண் மருங்கிற் றொடரீண லான" |
என்பது தொல்காப்பியம்
பொலந்துகில் - பீதாம்பரம். தெய்வ வான்பரந்த
சுரந்து பயப்ப வென்க. ஐவகை யுணவு - உண்பன, தின்பன, நக்குவன,
பருகுவனவோடு உறிஞ்சுவன என்பர்; ஐவகை அமுதம் என இயைத்தலுமாம்.
பரந்த : வினையாலணையும் பெயர். சிந்தாமணி - சிந்தித்தவற்றைத் தருமணி
எனக் காரணக்குறி. இரந்து என்றது பொதுவகையாற் கூறியது. (72)
தென்னர் சேகரன் றிருமக
டிருமணத் திருமுகம் வரவேற்று
மன்னர் வந்தெதிர் தொழுதுகைக்
கொண்டுதம் மணிமுடி மிசையேற்றி
அன்ன வாசகங் கேட்டனர்
கொணர்ந்தவர்க் கருங்கலந் துகினல்கி
முன்ன ரீர்த்தெழு களிப்புற
மனத்தினு முந்தினர் வழிச்செல்வார். |
(இ
- ள்.) தென்னர் சேகரன் திருமகள் - பாண்டியர்களின் முடி
போல்பவனாகிய மலயத்துவச பாண்டியன் திருப்புதல்வியாரின் திருமணத்
திருமுகம் - திருமணங் குறித்த ஓலையை, வரவேற்று - வரவேற்பாராய்,
மன்னர் எதிர் வந்து - மன்னர்கள் எதிர்கொண்டு வந்து, தொழுது -
வணங்கி, கைக்கொண்டு - கையில் வாங்கி, தம் மணிமுடி மிசை ஏற்றி -
தம்முடைய மணிகள் அழுத்திய முடியின்மேல் ஏற்றி, அன்ன வாசகம்
கேட்டனர் - அத்திருமுகச் செய்தியைக் கேட்டு, கொணர்ந்தவர்க்கு -
கொண்டு வந்தவர்களுக்கு, அருங்கலம் துகில் நல்கி - அரிய அணிகளும்
ஆடைகளும் அளித்து, முன்னர் ஈர்த்து எழு களிப்பு உற - முன் இழுத்துச்
செல்லும் களிப்பு மிக, மனத்தினும் முந்தினர் வழிச் செல்வார் - மனத்தினும்
விரைந்து வழிக்கொண்டு செல்வார்கள் எ - று.
வரவேற்றல்
- வருகையை உவகையுடன் தழுவுதல்; ஏற்று - ஏற்பாராய்;
ஏற்கத்தொடங்கி யென்பது கருத்து. வரவினை மன்னர் வந்து எதிர் ஏற்று
எனப் பிரித்தியைப்பாரு முளர். கேட்டல் - திருமுகம் வாசிப்பார் வாசிக்கக்
கேட்டல். திருமுக வாசகத்தைத் தூதர்கள் வாயாற் சொல்லக் கேட்டலுமாம்.
கேட்டனர், முந்தினர் : முற்றெச்சங்கள். (73)
|