I


386திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



கொங்கர் சிங்களர் பல்லவர் வில்லவர் கோசலர் பாஞ்சாலர்
வங்கர் சோனகர் சீனர்கள் சாளுவர் மாளவர் காம்போசர்
அங்கர் மாகத ராரியர் நேரிய ரவந்தியர் வைதர்ப்பர்
கங்கர் கொங்கணர் விராடர்கள் மராடர்கள் கருநடர் குருநாடர்.

     (இ - ள்.) கொங்கர் - கொங்கு நாட்டரசரும், சிங்களர் - சிங்கள
நாட்டரசரும், பல்லவர் - பல்லவநாட்டரசரும், வில்லவர் - சேரவரசரும்,
கோசலர் - கோசல நாட்டரசரும், பாஞ்சாலர் - பாஞ்சால நாட்டரசரும்,
வங்கர் - வங்க நாட்டரசரும், சோனகர் - சோனக நாட்டரசரும், சீனர்கள்
- சீன நாட்டரசரும், சாளுவர் - சாளுவ நாட்டரசரும், மாளவர் - மாளவ
நாட்டரசரும், காம்போசர் - காம்போச நாட்டரசரும், அங்கர் - அங்க
நாட்டரசரும், மகதர் - மகத நாட்டரசரும், ஆரியர் - ஆரிய நாட்டரசரும்,
நேரியர் - சோழ வரசரும், அவந்தியர் - அவந்தி நாட்டரசரும், வைதர்ப்பர்
- விதர்ப்ப நாட்டரசரும், கங்கர் - கங்க நாட்டரசரும், கொங்கணர் -
கொங்கண நாட்டரசரும், விராடர்கள் - விராட நாட்டரசரும், மராடர்கள் -
மராட நாட்டரசரும், கருநடர் - நருநட நாட்டரசரும், குருநாடர் - குரு
நாட்டரசரும், எ - று.

     இவருள் கொங்கர், பல்லவர், வில்லவர், நேரியர் என்போர் தமிழ்
மண்டலத்தினர்; சிங்களர், கங்கர், கொங்கணர், கருநடர் என்போர் தமிழ்
மண்டலத்தின் சார்பிலுள்ளவர். வில்லவர் - விற்கொடியையுடைய சேரர்.
நேரியர் - நேரி மலையையுடைய சோழர். மாகதர், வைதர்ப்பர்
தத்திதாந்தங்கள் : முதல் திரிந்தன. (74)

கலிங்கர் சாவகர் கூவிள
     ரொட்டியர் கடாரர்கள் காந்தாரர்
குலிங்கர் கேகயர் விதேகர்கள்
     பௌரவர் கொல்லர்கள் கல்யாணர்
தெலுங்கர் கூர்ச்சரர்* மச்சர்கள்
     மிலேச்சர்கள் செஞ்சையர் முதலேனைப்
புலங்கொண் மன்னருந் துறைதொறு
     மிடைந்துபார் புதைபட வருகின்றார்.

     (இ - ள்.) கலிங்கர் - கலிங்க நாட்டரசரும், சாவகர் - சாவக
நாட்டரசரும், கூவிளர் - கூவிள நாட்டரசரும், ஒட்டியர் - ஒட்டிய
நாட்டரசரும், கடாரர்கள் - கடார நாட்டரசரும், காந்தாரர் - காந்தார
நாட்டரசரும், குலிங்கர் - குலிங்க நாட்டரசரும், கேகயர் - கேகய
நாட்டரசரும், விதேகர்கள் - விதேக நாட்டரசரும், பௌரவர் -
பூருமரபினரசரும், கொல்லர்கள் - கொல்ல நாட்டரசரும், கல்யாணர் -
கலியான நாட்டரசரும், தெலுங்கர் - தெலுங்க நாட்டரசரும், கூர்ச்சரர் -
கூர்ச்சர நாட்டரசரும், மச்சர்கள் - மச்ச நாட்டரசரும், மிலேச்சர்கள் -
மிரேச்ச நாட்டரசரும், செஞ்சையர் - செஞ்சை நாட்டரசரும், முதல் -
முதலாக, ஏனைப் புலம் கொள் மன்னரும் - பிற நாட்டரசாகளும், துறை -
தொறும் - வழிகள் தோறும், மிடைந்து - நெருங்கி, பார் புதைப்பட
வருகின்றார் - பூமி மறையும்படி வருகின்றார்கள் எ - று.


     (பா - ம்.) * குர்ச்சரர்.