I


திருமணப் படலம்387



     கலிங்கம் - வடக்கே கீழ்கடலோரத்திலுள்ளது. சாவகம் - தெற்கிலுள்ள
தீவு; ஜாவா. கடாரம் - கிழக்கிலுள்ளது; பர்மாவின் ஒருபகுதி. பௌரவர் -
பூருமரபினர் : தத்திதாந்தம். கல்யாணர் - சளுக்கியர். (75)

இத்த கைப்பல தேயமன்
     னவர்களு மெண்ணிடம் பெறாதீண்டிப்
பைத்த வாழிபோ னிலமகள்
     முதுகிறப் பரந்ததா னையராகித்
தத்த நாட்டுள பலவகை
     வளனொடுந் தழீஇப்பல நெறிதோறும்
மொய்த்து வந்தனர் செழியர்கோன்
     திருமகள் முரசதிர் மணமூதூர்.

     (இ - ள்.) இத்தகைப் பல தேய மன்னவர்களும் - அத்தன்மையை
யுடைய பல நாட்டு மன்னர்களும், எண் இடம் பெறாது ஈண்டி - எள்ளிடவும்
இடமில்லையாக நெருங்கி, பைத்த ஆழிபோல் - பசிய கடலைப் போல,
நிலமகள் முதுகு இற - பார்மகளின் முதுகு ஒடியுமாறு, பரந்த தானையராகி -
(எங்கும்) பரந்த சேனையையுடையவராகி, தத்தம் நாட்டு உள - தங்கள்
தங்கள் நாட்டிலுள்ள, பலவகை வளனொடும் தழீஇ - பலவகை வளங்களையும் எடுத்துக்கொண்டு, பலநெறி தோறும் - பல வழிகள் தோறும், மொய்த்து -
நெருங்கி, செழியர் கோன் திருமகள் - பாண்டியர் மன்னனாகிய
மலயத்துவசன் திருமகளாரது, மணம் முரசுஅதிர் முதூர் - மணமுரசு
முழங்காநின்ற பழமையாகிய மதுரை நகர்க்கு, வந்தனர் - வந்தார்கள்
எ - று.

     எண் - எள்; எள் இடுதற்கும். இடம் பெறாது - இடமில்லையாக.
ஆழிபோற் பரந்த தானை யென்க. வளனொடும் - வளத்தையும்; உருபு
மயக்ம்; வளனொடும் பொருந்தி யெனின் மயக்கமின்று. (76)

வந்த காவல ருழையர்சென்
     றுணர்த்தினர் வருகென வருகுய்ப்பச்
சந்த வாளரிப் பிடரணை
     மீதறந் தழைத்தருள் பழுத்தோங்குங்
கந்த நாண்மலர்க் கொம்பினைக்
     கண்டுகண் களிப்புற முடித்தாமஞ்
சிந்த வீழ்ந்தருள் சுரந்திடத்
     தொழுதுபோய்த் திருந்துதம் மிடம்புக்கார்.

     (இ - ள்.) வந்த காவலர் - வந்த அரசர்கள்; உழையர் சென்று
உணர்த்தினர் - தம் வருகையை வாயில் காப்போர் சென்று பிராட்டியாருக்கு
அறிவித்தார்களாய், வருக என - வரக்கடவ ரெனப்பணித்த வளவில், அருகு
உய்ப்ப - தம்மை அண்மையிற் செலுத்த, சந்தவாள் அரிப்பிடர் அணைமீது
- அழகிய சிங்கத்தின் பிடரியின்கண் உள்ள ஆதனத்தின்மேல், அறம்
தழைத்து அருள்பழுத்து ஓங்கும் - தருமந்தழைத்துக் கருணை கனிந்து