I


388திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



ஓங்கும், கந்தம் நாள் மலர்க்கொம்பினை மணம் பொருந்திய அன்றலர்ந்த
மலர்களையுடைய கொம்புபோன்ற பிராட்டியாரை, கண் களிப்பு உற கண்டு
- (தம்) கண்கள் மகிழ்ச்சி மிகக் கண்டு, முடித்தாமம் சிந்த வீழ்ந்து தொழுது
- முடியின் கண் உள்ள மாலைகள் கீழே சிதற விழுந்து வணங்கி, அருள்
சுரந்திடப் போய் - பிராட்டியார் திருவருள் பாலிக்கச் சென்று, தம் திருந்து
இடம் புக்கார் - தத்தமக் கமைந்த திருந்திய இடங்களை யடைந்தார்கள்
எ-று.

     உழையர் உய்ப்பக் காவலர் கண்டு வீழ்ந்து தொழுதுபோய்ப் புக்கார்
என முடிக்க. வருகென - வருகவென்று பிராட்டியார் கட்டளையிட : அகரந்
தொகுத்தல். அறமாகிய தழையெனவும், அருளாகிய பழம் எனவும் விரிக்க :
உருவகம். (77)

வரைவ ளங்களும் புறவினில்
     வளங்களு மருதத்தண் பணைவேலித்
தரைவ ளங்களும் சலதிவாய்
     நடைக்கலந் தருவளங் களுமீண்டி
உரைவ ரம்பற மங்கலம்
     பொலிந்ததிவ வூரினி நால்வேதக்
கடைக டந்தவன் திருமணஞ்
     செயவரு காட்சியைப் பகர்கின்றேன்.

     (இ - ள்.) வரை வளங்களும் - மலைபடு பொருள்களும், புறவினில்
வளங்களும் - கான்படு பொருள்களும், மருதத் தண்பணை வேலி தரை
வளங்களும் - குளிர்ந்த கழனிகளை வேலியாகவுடைய மருதநிலத்துப்
பொருள்களும், சலதிவாள் நடைக்கலம் தருவளங்களும் - கடலின்கண்
மரக்கலந்தந்த பொருள்களும், ஈண்டி - நிறைப்பெற்று, இவ்வூர் - இம்மதுரை
நகரானது, உரை வரம்பு அற - சொல்லின் எல்லையில் இடங்காது, மங்கலம்
பொலிந்தது - மங்கலமாக விளங்கயிது; இனி - மேல், நால் வேதக்கரை
கடந்தவன் - நான்கு மறைகளின் வரம்பைக் கடந்தவனாகிய சிவபெருமான்,
திருமணம் செய வரு காட்சியைப் பகர்கின்றேன் - திருமணம் செய்ய
வருகின்ற அழகினைக் கூறுகின்றேன் எ - று.

     மருதமாகிய தரை யென்க. நடைக்கலன் - செல்லுதலையுடைய கலம்.
ஈண்டி : செயப்பாட்டு வினைப்பொருளது. உரை வரம்பு அற -
சொல்லினெல்லை யில்லையாக. (78)

ஏக நாயகி மீண்டபின் ஞாட்பிகந் திரசித கிரியெய்தி
நாக நாயக மணியணி சுந்தர நாயக னுயிர்க்கெல்லாம்
போக நாயக னாகிக்போ கம்புரி புணர்ப்பறிந் தருணந்தி
மாக நாயகன் மாலய னுருத்திரர் வரவின்மேன் மனம்வைத்தான்.

     (இ - ள்.) ஏகநாயகி - ஒப்பற்ற தலைவியாகிய தடாதகைப்பிராட்டியார்,
மீண்டபின் - (மதுரைக்குச்) சென்றபின், நாகம் நாயகம் அணி அணி -