I


திருநாட்டுச் சிறப்பு39



என விகாரப்பட்டன. மருங்கும் என்பதில் உம்மை அசை நிலை. நீத்தம்,
நீந்தப்படுவதென வெள்ளத்திற்குக் காரணக்குறி. நீந்து பகுதி, அம்
செயப்படுபொருள் விகுதி. (11)

அரும்பவி ழனங்க வாளி யலைதர வாகம் பொன்போர்த்
திரங்கிவா லன்ன மேந்தி யிருகையுஞ் சங்கஞ் சிந்தி
மருங்குசூழ் காஞ்சி தள்ளி வரம்பிற வொழுகும் வாரி
பரம்பாற் கையம் பெய்யும் பார்ப்பன மகளிர் போலும்.

     (இ - ள்.) அரும்பு அவிழ் - முகை விரிந்த, அனங்க வாளி - மன்
மத பாணமாகிய மலர்களை, அலை தர - அலைகள் ஒதுக்க, ஆகம் பொன்
போர்த்து - தன்னிடமுற்றும் பொன்மணலையுடைய தாய், இரங்கி - ஒலித்து,
வால் அன்னம் ஏந்தி - வெள்ளிய அன்னப்பறவைகளைத் தாங்கி,
இருகையும் சங்கம் சிந்தி - இரண்டு கரைகளிலும் சங்குகளைச் சிதறி,
மருங்குசூழ் காஞ்சி தள்ளி - பக்கங்களிற் சூழ்ந்த காஞ்சி மரங்களைத்
தள்ளிக்கொண்டு, வரம்பு இற ஒழுகும் வாரி - கரையுடையும் படி செல்லா
நின்ற பொருநை நதியானது, பரம்பரற்கு - சிவபெருமானுக்கு, ஐயம்
பெய்யும் - பிச்சையிடும், பார்ப்பன மகளிர் போலும் - தாருகாவனத்து
முனிபன்னியரை ஒக்கும் எ - று.

     அனங்கவாளி - காமபாணங்கள், அலைதர - வருத்த, ஆகம் பொன்
போர்த்து - உடல்முழுதும் பொன்போலும் தேமல் பூக்கப்பட்டு, இரங்கி -
மனங்கவன்று, வால் அன்னம் ஏந்தி - வெள்ளிய சோற்றை யேந்தி,
இருகையும் சங்கம் சிந்தி - இரண்டு கைகளிலுமுள்ள வளையல்களை
உதிர்த்து, மருங்கு சூழ் காஞ்சி தள்ளி - இடையில் அணிந்த காஞ்சி
யென்னும் அணியை விழுத்தி, வரம்பு இற ஒழுகும் - கற்புநிலை கெட
ஒழுகும் என, மகளிர்க்கேற்ப உரைத்துக்கொள்க. விரக நோயுற்று உடல்
மெலிதலால் வளையும் காஞ்சியும் தாமே கழன்று விழுதலைச் சிந்தி, தள்ளி
எனப் பிறவினையாற் கூறினார். காஞ்சி - இருகோவையுள்ள இடையணி;
எழுகோவை என்பாரும் உளர். மகளிர் ஐயமிட்டதனை வளையல்
விற்றபடலத்திற் காண்க. (12)

வரைபடு மணியும் பொன்னும் வைரமும் குழையும் பூட்டி
அரைபடு மகிலுஞ் சாந்து மப்பியின் னமுத மூட்டிக்
கரைபடு மருத மென்னுங் கன்னியைப் பருவ நோக்கித்
திரைபடு பொருநை நீத்தஞ் செவிலிபோல் வளர்க்கு மாதோ.

     (இ - ள்.) திரைபடு பொருநை நீத்தம் - அலைகளையுடைய
பொருநையின் வெள்ளமானது, வரைபடு - மலைகளிலுள்ள, மணியும்
பொன்னும் வைரமும் குழையும் பூட்டி - மணி பொன் வைரம் குழை
என்பவற்றைப் பூட்டி, அரைபடும் அகிலும் சாந்தும் அப்பி - அரைபட்ட
அகிலையும் சந்தனத்தையும் பூசி, இன் அமுதம் ஊட்டி - இனிய அமுதத்தை
உண்பித்து, கரைபடு மருதம் என்னும் கன்னியை - வரம்பு பொருந்திய மருத
நிலமாகிய மங்கையை, பருவம் நோக்கி - அவள் பருவத்திற்குத்
தகுந்தனவற்றை ஆராய்ந்து, செய்து செவிலிபோல் வளர்க்கும் -
கைத்தாயைப்போல வளர்க்கும் எ - று.