சங்கியோத்தா, வியோக்கிருதன்
எனப் பதின்மர்; நிருதி திக்கில் நிருதி,
மாரணன் அரந்தா, குரூரதிருட்டி, பயாந்தகன், ஊர்த்து வகாயன், விருபாட்சன்,
தூமிரு, லோகிதன், தெங்கிட்டிருணன் எனப் பதின்மர்; வருண திக்கில் -
பெலன். அதிபெலன், பாச அத்தன், மகா பெலன், சுவேதா, செயபத்திரன்,
தீர்க்கவாகு, செலாந்தகன், வடவாமுகன்; தீமான் எனப் பதின்மர்; வாயு
திக்கில் - சீக்கிரன், லகு, வாயு வேகன், தீட்சணன், சூக்குமன், சயாந்தகன்,
பஞ்சாந்தகன், பஞ்சசிகன், கபத்தி. மேகவாகனன் எனப்பதின்மர்; குபேர
திக்கில் - நிதீசன், ரூபவான், தன்னியன், சௌமியன், சௌமியதேகன்,
பிரமத்தனன், சுப்பிரகடன், பிரகாசன், இலக்குமிவரன், சோமேசன்
எனப்பதின்மர்; ஈசான திக்கில் - வியாத்தியாதீபன். ஞானபுகன், சருவன்,
வேதபாரகன், மாத்துருவித்தன், பிங்கலாட்சன், பூதபாலன், பெலீப்பிரியன்,
சருவவித்தியாதிபன், தாதா எனப் பதின்மர்; அண்டகடாக வோட்டுக் குக்கீழே
விட்டுணுதிக்கில் - அனந்தன், பாலன், வீரன், பாதாளாதிபதி, விபு,
இடபத்துவசன், உக்கிரன், சுப்பிரன், உலோகிதன் சருவன் எனப் பதின்மர்;
அண்டகடாகத்தினமேலே பிரம திக்கில் - சம்பு. விபு, கெணாத்தியட்சன்
திரியட்சன், திரீதேசகவாதகன், சன்வாகன், விவாகன், நபன், லீபசு,
விலட்சணன் எனப் பதின்மர்; ஆகிய இவர்களாம். (81)
புத்தி யட்டகர்
நாலிரு கோடிமேற் புகப்பெய்த நரகங்கள்
பத்தி ரட்டியுங் காப்பவர் பாரிடப் படையுடைக் கூர்மாண்டர்
சத்தி யச்சிவ பரஞ்சுட ருதவிய சதவுருத் திரரன்னார்
உய்த்த ளித்தவீ ரைம்பது கோடிய ருருத்திர கணநாதர். |
(இ
- ள்.) புத்தி அட்டகர் - அட்ட வித்தியோச்சுரர்களும், நாலிரு
கோடி மேல் புகப் பெய்த பத்திரட்டி நாகங்களும் காப்பவர் -
இருபத்தெட்டுக்கோடி நரகங்களையும் காப்பவர்களாகிய, பாரிடப்படை
உடைக் கூர்மாண்டர் - பூதப்படையினையுடைய கூர்மாண்டரும், சத்தியம்
- உண்மை வடிவமான, சிவபரஞ் சுடர் உதவிய - சிவபரஞ்சோதி அருளிய,
சத உருத்திரர் - நூறு உருத்திரர்களும், அன்னர் உய்த்து அளித்த ஈரைம்பது
கோடியர் உருத்திரர் - அவர்கள் தந்தருளிய நூறு கோடியாராகிய
உருத்திரர்களும், கணநாதர் - கணத்தலைவர்களும் எ - று.
நாலிரண்டு
மேற் பெய்தபத்திரட்டியாகிய கோடி யென்க. காப்பவராகிய
பாரிடப் படையென்க.
புத்தியட்டகராவார்
- சூக்கும புவனமெட்டின் அதிபதிகளாம்; அவர்கள்
- அனந்தர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேந்திரர், ஏகருத்திரர், திரி மூர்த்தி,
சீகண்டர் என்போர். சூக்கும புவனமாவன - பைசாசம், இராட்சசம், யாட்சம்,
காந்தர்வம், மாகேந்திரம், சௌமியம், பிராசேச்சுவம், பிராமம் என்பன ஆம்.
நாலிருகோடிமேற் புகப் பெய்த நரகங்களென்றவை - காலாக்கினி
உருத்திரதேவ நாயனார் புவனத்திற்குமேலுள்ளன; அவை அதிபாதகமுதலிய
பாவங்களைச் செய்தோர் வகித்தற்கு இருபத்தெட்டுத் தளங்களாகக் கட்டின
நிலை மாடங்கள் போல ஒன்றின்மேலொன்றா யிருக்கும்; இதனைச் சிவதரு
மோத்தரம் கோபுரவியலில்.
|