"இனையபுரி
மிசைநிரய மெழுநான்கு கோடியுறும்
நினையினவை யெழுநான்கு நிலைமடமே யெனநிலவுந்
தனியுறுவ ரவைதன்னிற் றுரிசரவற் றினுக்களவு
முனிலிருநூ றாயிரமு முப்பஃது கோடியுமே" |
எனவருஞ் செய்யுளாலுமறிக.
அவற்றைக் காப்போர் - பிரளய காலாக்
கினியும், பிரளயகாலத்துச் சூரியனும்போன்று திருவுருவமும் கறுத்த முகமும்
மழுவேந்திய கையுமுடைய கூர்மாண்ட தேவநாயனாரைப் புடை சூழ்ந்து
அவரைத் துதித்து அவரைப்போலும் உருவாய்ந்த அனேக உருத்திரர்கள்;
கூர்மாண்ட தேவநாயனார் அந் நிரயங்களின் மேற்பாகமாகிய கனக பூமியில்
அந்நகரங்களுக்கும் அவற்றைக் காப்போருக்கும் அதிபராயுள்ளவர்;
இவற்றை - இயலில்.
"மேலைய
கனகபுரி வீற்றிருப்பர் கூர்மாண்டர்
காலவழ லிரலியுருக் காளமுக மழுவுங்கை
கோலமுறு வட்டவிழி கொண்டுடைய ரவர்தம்மைப்
போலுமுருத் திரர்பலரும் புடைபடைவர் போற்றிசைத்தே" |
எனவருஞ் செய்யுளானுமுணர்க.
சதவுருத்திரராவார் - மந்திரம், பதம்,
வன்னம், புவனம், தத்துவம் கலை ஆகிய ஆறத்துவாக்களில் முறையாய்
அமர்ந்துள்ளவர். ஈரைம்பது கோடி யுருத்திரர்கள் பிரமாண்ட தர
உருத்திரர்களுக்கு உள்ளிட்டவர்கள். (82)
பட்ட காரிவா
யரவணி பவர்பசு பதியுருத் திரராதி
அட்ட மூர்த்திகள் மேருவி னவிர்சுட ராடகர் தோடேந்தும்
மட்ட றாமலர் மகன்செருக் கடங்கிட மயங்கிய விதிதேற்ற
நிட்டை யாலவ னெற்றியிற் றோன்றிய நீலலோ கிதநாதா. |
(இ
- ள்.) காரிபட்டவாய் அரவி அணி - நஞ்சு பொருந்தியவாயினை
யுடைய பாம்புகளை அணிந்த, பவர் பசுபதி உருத்திரர் ஆதி அட்ட
மூர்த்திகள் - பவர் பசுபதி உருத்திரர் முதலான எட்டு மூர்த்திகளும்,
மேருவின் அவிர்சுடர் ஆடகர் - மேருவைபபோல் விளங்கும் ஒளியினை
யுடைய ஆடகேச்சுரர்களும், தோடு ஏந்தும் - இதழ்களை ஏந்திய மட்டு
அறா - தேன் நீங்காத, மலர்மகன் செருக்கு அடங்கிட - தாமரை மலரில்
வசிக்கும் பிரமனின் தருக்கு அடங்க, மயங்கிய விதி தேற்ற - அவன்
மயங்கிய ஆக்கற்றொழிலைத் தெளிவிக்க. நிட்டையால் அவன் நெற்றியில்
தோன்றிய நீல லோகித நாதர் - நிட்டையினால் அவனது நெற்றியிலுதித்த
நீல லோகித உருத்திரரும் எ - று.
காரி
- நஞ்சு. தோடேந்தும், மட்டறா என்னும் அடைகள்
மலருக்குரியன. விதி - விதித்தல்; படைத்தல்,
பவர்
முதலிய அட்ட மூர்த்திகளாவார் : - பவன், சருவன்,
ஈசானன், பசுபதி, வீமன், மாதேவன், உக்கிரின், உருத்திரன் என்போர் :
இதனைக் கூர்மபுராணம் அட்ட மூர்த்தி யியல்புரைத்த
அத்தியாயத்தில்.
"எய்து
நாமமென் னெனிற்பவன் சருவ னீசானன்
வைதி கந்தரு பசுபதி வீமன் மாதேவ
னெய்தி ளம்பிறை யணிந்திடு முருத்திர னென்ப
மைதி கழ்ந்தொளிர் கண்டனெண் வடிவமும் வகுப்பாம்" |
|