I


394திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



கபாலத்தைக் கையிலேந்தியவருமான சிவகணத் தலைவர்களும், துரகத
நெடுங்காரி - குதிரையையுடைய பெரிய சாத்தனும், நீலம் ஏற்ற
பைங்கஞ்சுகப் போர்வையின் நெடியவர் - கரிய நிறம் பொருந்திய பசிய
சட்டையைத் தரித்த சிவகணத் தலைவர்களும், நிருவாணக் கோலம் ஏற்றவர்
- ஆடையில்லாக் கோலமுடையராய், ஞாளிப்புறம் கொண்ட கேத்திர பாலர்
எண்மர் - ஞாளியின் முதுகிற் றங்குதலைக் கொண்ட கேத்திர பாலர்
எண்மரும் எ - று.

     பாலம் - நெற்றி. பெயர் என்பது வழக்கு. ஏற்ற வென்பது கபாலியர்
என்பதன் விகுதியைக் கொண்டு முடியும், கங்காளர் - முழுவெலும்
பணிந்தவர், ஏற்றவராகிய கேத்திர பாலர் எண்மரென்க, ஞாளி - நாய்.
கேத்திரம் - க்ஷேத்திரம், உருத்திரர் பதினொருவர் : மாதேவன், அரன்,
உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன் விசையன், வீமதேவன்,
பவோற்பவன், கபாலி, சௌமியன் என்போர், கேத்திர பாலர் எண்மர் :
அசிதாந்தகா, குரு, சண்டர், குரோதனர், உன்மத்தர், கபாலி, பீடணர்,
சங்கரர் என்போர். (84)

செய்ய தாமரைக் கண்ணுடைக்
     கரியவன் செம்மலர் மணிப்பீடத்
தையன் வாசவ னாதியெண்
     டிசைப்புலத் தமரரெண் வசுதேவர்
மையில் கேள்விசா லேழெழு
     மருத்துகள் மருத்துவ ரிருவோர்வான்
வெய்ய வாள்வழங் காறிரண்
     டருக்கரோர் வெண்சுடர் மதிச்செல்வன்.

     (இ - ள்.) செய்யதாமரைக் கண் உடை கரியவன் - செந்தாமரை
மலர்போன்ற கண்களையுடைய திருமாலும், செம்மலர் மணிப்பீடத்து ஐயன்
- செந்தாமரைமலரை அழகிய பீடமாகக் கொண்ட பிரமனும், வாசவன் ஆதி
எண் திசைப் புலத்து அமரர் - இந்திரன் முதலான எட்டுத்
திக்குப்பாலர்களும், எண்வசுதேவர் - எட்டு வசுக்களும் மை இல் கேள்வி
சால் ஏழெழு மருத்துகள் - குற்றமற்ற நூற் கேள்விமிக்க நாற்பத்தொன்பது
மருத்துக்களும், மருத்துவர் இருவோர் - அச்சுவனி தேவரிருவரும், வான்
வெய்ய வாள் வழங்கு ஆறிரண்டு அருக்கர் - வானினின்றும் வெப்பமாகிய
ஒளியை வீசும் பன்னிரண்டு சூரியர்களும், வெண்சுடர் ஓர் மதிச் செல்வன்
- வெள்ளிய ஒளியினையுடைய ஒரு சந்திரனும் எ - று.

     திசைப்பாலகர் பெயர்கள் முற் கூறப்பட்டன. அட்ட வசுக்கள் :
அனலன், அணிகலன், ஆபத்சைவன், சோமன், தரன், துருவன், விரத்தியூடன்,
பிரபாசன் என்போர். மருத்துகள் - காசிபர்க்குத் திதியிடம் உதித்தவர்கள்;
இந்திரனால் கரு ஏழு கூறாக்கப்பட ஒவ்வொரு கூற்றிலிருந்தும் எவ்வேழு
மைந்தர்களாக நாற்பத்தொன்பதின்மர் தோன்றினர்; இவர்கள் காற்றினுருவாய்
இயங்குவர். மருத்துவர் இருவர் - சூரியன் புதல்வர். ஆறிரண்டருக்கர் -
காசிபருக்கு அதிதியிடம் பிறந்தவர்கள்; தாதை, மித்திரன், அரியமான்,
சுக்கிரன், வருணன், அஞ்சு மான், பகன், விவச்சுவந்தன், பூடன், சவிதன்,
துவட்டா, விட்டுணு என்போர். (85)