I


திருமணப் படலம்395



கையுங் கால்களுங் கண்பெற்றுக்
     கதிபெற்ற கடும்புலி முனிச்செல்வன்
பைய ராமுடிப் பதஞ்சலி
     பாற்கடல் பருகிமா தவன்சென்னி
செய்ய தாள்வைத்த சிறுமுனி
     குறுமுனி சிவமுணர் சனகாதி
மெய்யு ணர்ச்சியோர் வாமதே
     வன்சுகன் வியாதனா ரதன்மன்னோ.

     (இ - ள்.) கையும் கால்களும் கண்பெற்று - கைகளிலும் கால்களிலும்
கண்களைப் பெற்று, கதிபெற்ற கடும்புலி முனிச் செல்வன் - வீடு பேற்றை
யடைந்த கடிய தவமாகிய செல்வத்தினையுடைய புலிக்கால் முனியும், பைமுடி
அரா பதஞ்சலி - படத்தைக் கொண்ட முடியினையுடைய பாம்பாகிய பதஞ்சலி
முனியும், பால் கடல் பருகி - பாற்கடலைக் குடிதது, மாதவன் சென்னி -
திருமாலின் முடியில், செய்ய தாள் வைத்த - சிவந்த அடிகளை வைத்த,
சிறுமுனி - உபமன்னியு முனியும், குறுமுனி - அகத்திய முனியும், சிவம்
உணர் சனச ஆதி மெய் உணர்ச்சியோர் - சிவத்தை உணர்ந்த சனகர்
முதலிய மெய்யுணர்வையுடைய நான்கு முனிவர்களும், வாமதேவன் சுகன்
வியாதன் நாரதன் - வாமதேவ முனியும் சுகமுனியும் வியாத முனியும் நாரத
முனியும் எ - று.

     கடுமை தவத்தின்மேற்று; புலியென்பது குறித்துமாம். மன்னும் ஓவும்
அசைகள்

.      புலிமுனி - வியாக்கிர பாதர்; இவர் மத்தியந்தன் முனிவரின் புதல்வர்;
மழமுனிவர் என்னும் பெயருடையவர்; இவர் தில்லைத் திருப்பதியை யடைந்து
சிவபெருமானை வணங்கி, அருச்சித்தற்குப் பழுதில்லாத மலர்களை விடியுமுன்
மரங்களிலேறிக் கொய்தற் பொருட்டாகப் புலிக்காலும் கையும் அவற்றிற்
கண்களும் பெற்றார். பதஞ்சலி - அத்திரி முனியின் பத்தினியாகிய
அனசூயையிடம் தோன்றியவர்; ஆதிசேடன் அவதாரம்; சேடன்
சிவசிந்தனையுடன் அஞ்சலிசெய்திருக்கும் அன சூயையின் கையில் விழுந்து
பின் பாதத்தில் விழுந்து அக்காரணத்தால் பதஞ்சலியெனப் பெயரெய்தின
னென்ப. இவ்விருவரும் தவம்புரிந்து சிதம்பரத்தில் சிவபெருமான் புரியும்
ஆனந்தத்தாண்டவத்தைத் தரிசித்துக் கொண்டிருப் போராவர். உபம்ன்னியு -
வியாக்கிர பாதருக்கு வசிட்டரின் தங்கையிடம் உதித்தவர்; குழந்தையா
யிருக்கும் பொழுது சிவபெருமானைக் குறித்துத் தவம் புரிந்து இறைவனால்
அளிக்கப்பட்ட பாற்கடலை யுண்டவர்; கண்ணனுக்குச் சிவதீக்கை
செய்வித்தவர்; இவர் பாற்கடலுண்ட செய்தி,

"பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப் பாற்கடலிந்த பிரான்"

எனத் திருப்பல்லாண்டிலும்,

"அத்தர் தந்த வருட்பாற் கடலுண்டு"