எனத் திருத்தொண்டர்
புராணத்திலும், கண்ணனுக்குச் சிவதீக்கை
செய்வித்தது,
"யாத வன்றுவ
ரைக்கிறை யாகிய
மாத வன்முடி மேலடி வைத்தவன்" |
எனத் திருத்தொண்டர்
புராணத்திலும் கூறப்பட்டுள்ளன. இவ்
வரலாறுகளைக் கோயிற் புராணத்திலும் பிறவற்றிலுங் காண்க.
எனையரைப்பற்றிய குறிப்புக்கள் புராண வரலாற்றிற் கூறப்பட்டன. (86)
எழுவ ரன்னையர் சித்தர்விச் சாதர
ரியக்கர் கின்னரர் வேத
முழுவ ரம்புணர் முனிவர்யோ
கியர்மணி முடித்தலைப் பலநாகர்
வழுவில் வான்றவ வலியுடை
நிருதர்வாள் வலியுடை யசுரேசர்
குழுவொ டும்பயில் பூதவே
தாளர்வெங் கூளிக ளரமாதர். |
(இ
- ள்.) எழுவர் அன்னையர் - ஏழு மாதரும், சித்தர் - சித்தரும்
விச்சாதரர் - வித்தியாதரரும், இயக்கர் - இயக்கரும், கின்னரர் - கின்னரரும்,
வேதவரம்பு முழு உணர் முனிவர் யோகியர் ? மறையின் எல்லை முடிய
உணர்ந்த முனிவர்களும் யோகிகளும் மணி முடித்தலை பல நாகர் - மணி
விளங்கும் உச்சியையுடைய தலையினையுடைய பல உரகர்களும், வழு இல்
வான் தவ வலி உடை நிருதர் - குற்றமில்லாத சிறந்த வலிமையையுடைய
அரக்கர்களும், வாள் வலி உடை அசுரேசர் - வாளின் வலியுடைய அசுரர்
தலைவர்களும், குழுவொடும் பயில் பூத வேதாளர் - கூட்டத்தோடு உலாவும்
பூத வேதாளர்களும், வெம் கூளிகள் - கொடிய அன்னையர் என்க :
சத்தமாதர். (87)
ஆண்டி னோடய னம்பரு
வந்திங்க ளாறிரண் டிருபக்கம்
ஈண்டு மைம்பொழு தியோகங்கள்
கரணங்க ளிராப்பக லிவற்றோடும்
பூண்ட நாழிகை கணமுதற்
காலங்கள் பொருகட னதிதிக்கு
நீண்ட மால்வரை திக்கய
மேகமின் னிமிர்ந்தவைம் பெரும்பூதம். |
(இ
- ள்.) ஆண்டனோடு அயனம் பருவம் ஆறிரண்டு திங்கள் இரு
பக்கம் - ஆண்டுகளும் அயனங்களும் பருவங்களும் பன்னிரண்டு
மாதங்களும் இரண்டு பக்கங்களும், ஈண்டும் ஐம்பொழுது யோகங்கள்
|