I


திருமணப் படலம்397



கரணங்கள் இராப்பகல் இவற்றோடும் - நெருங்கிய ஐந்து பொழுதுகளும்
யோகங்களும் கரணங்களும் இரவும் பகலுமாகியய இவற்றினோடும், பூண்ட
நாழிகை கணம் முதல் காலங்கள் பொருந்திய நாழிகையும் கணமும் முதலிய
காலங்களும், பொருகடல் நதிதிக்கு - மோதும் கடல்களும் ஆறுகளும்
திசைகளும், நீண்ட மால்வரை - நெடிய பெரிய மலைகளும், திக்கயம் -
திக்கு யானைகளும். மேகம் - மேகங்களும், மின் - மின்னல்களும், நிமிர்ந்த
ஐம்பெரும் பூதம் - உயர்ந்த ஐந்து பெரிய பூதங்களும் எ - று.

     அயனம் - உத்தராயணம், தக்கிணாயனம். பருவம் - கார், கூதிர்,
முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில். இருபக்கம் - முற்பக்கம்,
பிற்பக்கம்; சுக்கில பக்கம், கிருட்டிண பக்கம். ஐம்பொழுது - மாலை, யாமம்,
வைகறை, காலை, நண்பகல். யோகங்கள் - விட்கம்பம் முதலிய இருபத்தேழு.
கரணங்கள் - பவம் முதலிய பதினொன்று. திக்குவரை யென்னலுமாம்.
இவையெல்லாம் இவற்றிற்குத் தெய்வங்களுண் டென்னுங் கொள்கையாற்
கூறப்பட்டன. (88)

மந்தி ரம்புவ னங்கடத் துவங்கலை வன்னங்கள்* பதம்வேதந்
தந்தி ரம்பல சமயநூற் புறந்தழீ இச் சார்ந்தநூ றருமாதி
முந்தி ரங்கிய சதுாவிதஞ் சரியையே முதலிய சதுட்பாதம்
இந்தி ரங்குநீர் முடியவ ரடியவ ரிச்சியா வெண்சித்தி.

     (இ - ள்.) மந்திரம் - மந்திரங்களும், புவனங்கள் - புவனங்களும்,
தத்துவம் - தத்துவங்களும். கலை - கலைகளும், வன்னங்கள் - எழுத்துக்
களும், பதம் - பதங்களும், வேதம் - மறைகளும், தந்திரம் ஆகமங்களும்,
பல சமயநூல் - பலவகைச் சமய நூல்களும், புறம்தழீஇ சார்ந்த நூல்
இவற்றின் புறமாக இயைந்து பொருந்திய நூல்களும், தருமம் ஆதி முந்து
இரங்கிய - இறமுதலாக முதன்மையாகச் சொல்லப்பட்ட, சதுர் விதம் -
உறுதிப் பொருள் நான்கும், சரியை முதலிய சதும் பாதம் - சரியை முதலிய
நான்கு பாதங்களும், இந்து இரங்கு நீர் முடியவர் அடியவர் இச்சியா
எண்சித்தி - சந்திரனையும் ஒலிக்குங் கங்கையினையும் அணிந்து
முடியினையுடைய சிவபெருமானுடைய அடியார்கள் விரும்பாத எட்டுச்
சித்திகளும் எ - று

     மந்திரம் முதலிய ஆறும் அத்துவாக்கள் எனப்படும்; மந்திரம், பதம்
வன்னம் என்பன ஒலிவடிவும், கலை, தத்துவம் புவனம் என்பன பொருள்
வடிவும் ஆம். புறந்தழுவிய நூல்கள். பொருணூல், இசை நூல் முதலியன.
இரங்கிய - ஒலித்த; ஈண்டுக் கூறப்பட்ட என்னும் பொருளது. சதுட்பாதம் :
வடசொல் திரிந்து நின்றது. எண் சித்தி : அணிமா, மகிமா, லகிமா, கரிமா,
பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன; சிவனடியார்கள்
எட்டுச் சித்தியும் விரும்பா ரென்பதனை,

"இநதிரச் செல்வமும் எட்டுச் சித்தியும்
வந்துழி வந்துழி மறுத்தன ரொதுங்கி"

எனப் பட்டினத்துப் பிள்ளையார் கூறுமாற்றானு மறிக. (89)


     (பா - ம்.) * வருணங்கள்.