ஆயி ரங்கட லனையவாய்ப் பரந்தெழு மாயிர மனிகத்துள்
ஆயி ரங்கதி ரனையரா யுருத்திர ரந்தரத் தவரண்டம்
ஆயி ரந்தகர் பட்டெனத் துந்துபி யாயிரங் கரந்தார்ப்ப
ஆயி ரஞ்சத கோடியோ சனைவழி யரைக்கணத் திடைச்சொல்வார். |
(இ
- ள்.) ஆயிரம் கடல் அனையவாய்ப் பரந்து எழும் ஆயிரம்
அனிகத்துள் - ஆயிரங்கடல்களை ஒப்பனவாய்ப் பரந்து எழுந்த எல்லை
அற்ற சேனைகளும், ஆயிரம் கதிர் அனையராய் உருத்திரர் அந்தரத்தவர் -
அளவற்ற சூரியர்களை ஒத்தவர்களாய் உருத்திரர்களும் தேவர்களும்,
ஆயிரம் அண்டம் தகர்பட்டென - பல்லாயிர அண்டங்களும் உடைபட்டன
வென்று சொல்லுமாறு, ஆயிரம் துந்துமி கலந்து ஆர்ப்ப - எண்ணிறந்த
வாத்தியங்கள் தம்முட் கலந்து ஒலிக்க, ஆயிரம் சதகோடி யோனை வழி -
நூறாயிரங்கோடி யோசனை வழியை, அரைக் கணத் திடைச்செல்வார் அரைக்
கணப்பொழுதிற் சென்று கடப்பா ராயினர் எ - று.
ஆயிரம்
முதலியன அளவின்மை குறிப்பன. பட்டென - பட்டாலென.
சதம் - நூறு. சத ஆயிரம் என மாறுக. (90)
சித்தந் தேர்முனி வேந்தருந்
தேவருஞ் சிவனுருத் தரித்தோருந்
தத்தந் தேர்முத லூர்தியர்
வார்திகழ் சந்தன மணிக்*கொங்கைக்
கொத்தந் தேமலர்க் குழன்மனை
யாரொடுங் குளிர்விசும் பாறாச்சென்
றத்தந் தேரிடை யாள்பங்க
னணிவரைக் கணியராய் வருகின்றார். |
(இ
- ள்.) சித்தம் தேர் முனிவேந்தரும் - மனந்தெறிந்த முனி
புங்கவர்களும், தேவரும் - தேவாகளும், சிவன் உரு தரித்தோரும் -
உருத்திரர்களும். தத்தம் தேர் முதல் ஊர்தியர் - தங்கள் தங்கள் தேர்
முதலிய ஊர்திகளையுடையவராய், வார்திகழ் - கச்சு விளங்கும், சந்தனம் -
களபமணிந்த, மணிக்கொங்கை - சூசுகத்தினையுடைய கொங்கைகளையும்,
அம் தேம் மலர்க்கொத்து - அழகிய தேனையுடைய பூங்கொத்தினை யணிந்த,
குழல் - கூந்தலையுமுடைய, (தத்தம்) மனையாரொடும் - தங்கள் தங்கள்
மனைவியரோடும், குளிர் விசும்பு ஆறாச் சென்று - குளிர்ந்த வான் வழியாகச்
சென்று, அ தந்து ஏர் இடையாள் பங்கன் - அந்த நூல் போலும்
இடையினையுடைய உமையவனை ஒரு பாகத்திலுடைய சிவ பிரானது,
அணிவரைக்கு அணியராய் வருகின்றார் - அழகிய கயிலை மலைக்கு
நெருங்கியவராய் வருகின்றார்கள் எ - று.
தேர்தல்
- ஆராய்தல்; ஈண்டு ஆராய்ந்த தெளிவைக் குறிக்கும். தத்தம்
என்பதனை மனையாரொடுங் கூட்டுக. ஆறா - வரியாக : விகாரம். அ :
பண்டறி சுட்டு. (91)
(பா
- ம்.) *சந்தனமணி கொங்கை.
|