இழிந்த வூர்தியா பணிந்தெழும்
யாக்கைய ரிறைபுகழ் திருநாமம்
மொழிந்த நாவினர் பொடிப்பெழு
மெய்யினர் முகிழ்த்தகை முடியேறக்
கழிந்த வன்பினர் கண்முதற்
புலங்கட்குங் கருணைவான் சுவையூறப்
பொழிந்த வானந்தத் தேனுறை
திருமலைப் புறத்துவண் டெனமொய்த்தார். |
(இ
- ள்.) இழிந்த ஊர்தியர் - (இங்ஙனம் வந்தவர்கள்)
ஊர்திகளினின்றும் இறங்கினவர்களாய், பணிந்து எழும் யாக்கையர் -
விழுந்து பணிந்தெழும் உடலையுடையவர்களாய், இறைபுகழ் திருநாமம்
மொழிந்த நாவினர் - இறைவன் திருப்புகழ்களையும் திருப்பெயர்களையும்
பரவும் நாவினை யுடையவர்களாய், பொடிப்பு எழுமெய்யினர் -
புளகங்கொண்ட மெய்யினை யுடையவர்களாய், முகிழ்த்தகை முடி ஏறக்
கழிந்த அன்பினர் - கூப்பிய கைகள் உச்சியில் ஏற மிக்க
அன்பினையுடையவர்களாய், கண்முதல் புலங்கட்கும் - கண் முதலிய
ஐம்பொறிகளுக்கும், கருணைவான் சுவை ஊற - அருளாகிய சிறந்த சுவை
சுரக்குமாறு, பொழந்த ஆனந்தத் தேன் உறை - பொழிந்த ஆனந்தத்
தேனாகிய இறைவன் வதியும், திருமலைப் புறத்து - திருமலையின் வெளியில்,
வண்டு என மொய்த்தனர் - வண்டுகள்போல நெருங்கினார்கள் எ - று.
இழிந்த
வூர்தியர் முதலியவற்றில் விகுதி பிரித்துக் கூட்டுக. கழிந்த -
மிக்க : கழியென்னும் உரிச்சொல்லடியாக வந்தது. கண் முதற் புலனாற்
காட்டிசயுமில்லோன் ஆகிய இறைவன் அப்புலங்கட்கும் எளி வந்த பெருங்
கருணையைக் கூறினார்;
"உணர்வி
னேர்பெற வருஞ்சிவ
போகத்தை யொழிவின்றி யுருவின்கண்
அனையு மைம்பொறி யளவினு
மெளிவர வருளினை யெனப்போற்றி" |
எனத் திருத்தொண்டர்
புராணம் கூறுமாறும் காண்க; ஆனந்தத்
"தேனுறை திருமலை" என்பது மிக்க நயமுடைத்து;
"அந்த
விடைமருதி லானந்தத் தேனிருந்த
பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ" |
என்னும் திருவாசகம்
இங்கே சிந்திக்கற்பாலது. (92)
விரவு
வானவர் நெருக்கற
வொதுக்குவான் வேத்திரப் படையோச்சி
அரவு வார்சடை நந்தியெம்
பிரானவ ரணிமணி முடிதாக்கப் |
|