குழை
- குண்டலம், தளிர். அமுதம் - பால், நீர். மலையிலுள்ள
வற்றை வாரிச்சென்று மருதத்திற் சேர்ப்பதனைக் கன்னியென்றதற் கேற்பப்
பூட்டி என்றும் அப்பி என்றுங் கூறினார். கள்ளியை வளர்க்கு மென்க.
செவிலிபோல் - செவிலி வளர்ப்பதுபோல். (13)
மறைமுதற்
கலைக ளெல்லா மணிமிடற் றவனே யெங்கும்
நிறைபர மென்றும் பூதி சாதன நெறிவீ டென்றும்
அறைகுவ தறிந்துந் தேறா ரறிவெனக் கலங்கி யந்த
முறையின்வீ டுணர்ந்தோர் போலத் தெளிந்தது மூரிவெள்ளம். |
(இ
- ள்.) மறைமுதல் கலைகள் எல்லாம் - வேதமுதலிய கலைகள்
எல்லாமும், மணிமிடற்றவனே - நீலமணிபோலும்கண்டத்தையுடைய
சிவபெருமானே, எங்கும் நிறைபரம் என்றும் - எங்கும் நிறைந்த பரம்
பொருள் என்றும், பூதிசாதனம் - திருநீறு முதலிய சாதனங்களே, வீடு நெறி
என்றும் - வீடு பேற்றுக்கு வழி என்றும், அறைகுவது அறிந்தும் - கூறுவதை
அறிந்து வைத்தும், தேறார் அறிவென - தெளியாதவரின் அறிவின்
கலக்கத்தைப்போல, மூரிவெள்ளம் கலங்கி - பெரிய வெள்ளமானது
கலங்குதலுற்று, அந்த முறையின் வீடு உணர்ந்தோர் போல - அவை
கூறுமுறையான் வீட்டினை உணர்ந்த பெரியாரின் திரு வுள்ளத்தின்
தெளிவுபோல, தெளிந்தது - தெளிவையடைந்தது எ - று.
பூதிசாதன்ம
என்னுந்தொடர்க்குத் திருநீறாகிய சாதனம் என்றும்
பொருள் கூறுதல் அமையும். எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ்
சாதனமுங் கண்டா லுள்கி என்று தமிழ்மறை
கூறுதலின் திருநீறும்
சாதனமும் என்று பொருள் கூறுதல் சிறப்பு. சாதனம், உருத்திராக்கம்
என்றும், திருவைந்தெழுத்தென்றும் கூறுவர். வீட்டு நெறி என
மாற்றியுரைக்கப்பட்டது. பூதிசாதன நெறி என நிறுத்திச் சைவசமயம் என்று
பொருள் கொள்ளலும் ஆம். இதற்கு வீட்டிற் கேதுவை வீடென
உபசரித்தாரெனல் வேண்டும். (14)
மறைவழி கிளைத்த
வெண்ணெண்
கலைகள்போல் வருநீர் வெள்ளந்
துறைவழி யொழுகும் பல்கால்
சோலைதண் பழனஞ் செய்தேன்
உறைவழி யோடை யெங்கு
மோடிமன் றுடையார்க் கன்பர்
நிறைவழி யாத வுள்ளத்
தன்புபோ னிரம்பிற் றன்றே. |
(இ
- ள்.) வருநீர் வெள்ளம் - வருகின்ற பொருறையின் வெள்ள
மானது, மறைவழி கிளைத்த - வேதத்தினின்றுங் கிளைத்த, எண் எண்
கலைகள்போல் - அறுபத்துநான்கு கலைகளைப்போல், துறைவழி ஒழுகும -
நீர்த்துறைகளினின்று கிளைத்துச் செல்லாநின்ற, பல்கால் - பல மருத
நிலத்திலும், செய் - கழனிகளிலும், தேன் உறை வழி ஓடை - தேன்
|