பரவு தூளியிற் புதைபடு
கயிலையம் பருப்பதம் பகல்காலும்
இரவி மண்டலத் தொடுங்குநா
ளொடுங்கிய விந்துமண் டலமானும். |
(இ
- ள்.) விரவு வானவர் நெருக்கு அற ஒதுக்குவான் - நெருங்கிக்
கூடிய தேவர்களின் நெருக்கமற ஒதுக்கும் பொருட்டு, அரவுவார்சடை -
பாம்பினையணிந்த நீண்ட சடையினையுடைய, எம்பிரான் நந்தி -
எம்பிரானாகிய திருநந்தி தேவர். வேத்திரப்படை ஓச்சி - பிரம்புப் படையை
வீசி, அவர் அணிமணி முடிதாக்க - அத்தேவர்கள் அணிந்த மணி
முடிகளிற்றாக்குதலால், பரவு தூளியில் (சிந்திப்) பரந்தமணித்துகளினுள்,
புதைபடு கயிலை அம் பருப்பதம் - மறைந்த அழகிய கயிலை மலையானது,
பகல் காலும் இரவி மண்டலத்து - ஒளிவீசும் சூரிய மண்டலத்துள், ஒடுங்கு
நாள் ஒடுங்கிய - அமாவாசையில் ஒடுங்கிய, இந்து மண்டலம் மானும் -
சந்திர மண்டலத்தை ஒக்கும் எ - று.
ஒதுக்குவான்;
வினையெச்சம். மணித்துகளின் பரப்பு இரவி மண்டலமும்,
அதனுள் மறைந்த வெள்ளி மலையாகிய திருக்கயிலை சந்திர மண்டலமும்
போன்றன வென்றார். ஒடுங்கு நாள்-கலைகள் ஒடுங்கிய நாள் : அமாவாசை.
(93)
வந்த வானவர் புறநிற்ப
நந்தியெம் வள்ளலங் குள்ளெய்தி
எந்தை தாள்பணிந் தையவிண்
ணவரெலா மீண்டினா ரெனவீண்டுத்
தந்தி டென்னவந் தழைத்துவேத்
திரத்தினாற் றராதரந் தெரிந்துய்ப்ப
முந்தி முந்திவந் திறைஞ்சினார்
சேவடி முண்டக முடிசூட. |
(இ
- ள்.) வந்த வானவர் வுறம் நிற்ப - வந்த தேவர்கள் புறத்தில்
நிற்க, எம் வள்ளல் நந்தி அங்கு எய்தி - அம் வள்ளலாகிய திரு நந்தி
தேவர் அங்கு உள்ளே சென்று, எந்தை தாள் பணிந்து - எம் அப்பனாகிய
இறைவன் திருவடிகளை வணங்கி, ஐய - ஐயனே, விண்ணவர் எலாம்
ஈண்டினார் என - தேவர்கள் அனைவரும் வந்திருக்கின்றார்களென்று கூற,
ஈண்டு தந்திடு என்ன - (ஆயின்) இங்கு அழைப்பாயென்று கட்டளையிட,
வந்து அழைத்து தராதரம் தெரிந்து வேத்திரத்தினால் உய்ப்ப - வந்து
அவர்களை அழைத்து அவரவர் தகுதியையறிந்து பிரப்பங்கோலாற் குறித்துச்
செலுத்த, சேவடி முண்டகம் முடிசூட - சிவந்த திருவடிகளாகிய தாமரை
மலர்களைத் தங்கள் முடிகள் சூடுமாறு. முந்தி முந்தி வந்து இறைஞ்சினார் -
முற்பட்டு முற்பட்டு வந்து வணங்கினார்கள் எ - று.
தந்திடல்
- கொணர்தல். தரம் - தகுதி. தராதரம - தகுதி வேற்றுமை.
பிரம்பாற் குறித்துக் காட்டி உய்ப்ப. (94)
|