தீர்த்தன் முன்பணிந் தேத்துகின்
றார்களிற் சிலர்க்குத்தன் றிருவாயின்
வார்த்தை நல்கியுஞ் சிலர்க்கருண்
முகிழ்நகை வழங்கியுஞ் சிலர்க்குக்கண்
பார்த்து நீண்முடி துளககியுஞ்
சிலர்க்கருட் பரிசிறந் தெழுந்தண்டங்
காத்த கண்டனோர் மண்டபத்
திடைபுக்குக் கடிமணக் கவின்கொள்வான். |
(இ
- ள்.) தீர்த்தன் - சிவபெருமான், முன் பணிந்து
ஏத்துகின்றார்களில் - தமது திருமுன் வணங்கிப் பரவுகின்றார்களில்,
சிலர்க்குத் தன் திருவாயின் வார்த்தை நல்கியும் - சிலருக்குத் தமது
திருவாயால் வார்த்தையருளியும், சிலர்க்கு அருண் முகிழ் நகை வழங்கியும்
- சிலருக்கு அருளோடு கூடிய புன்னகை அரும்பியும், சிலர்க்குக் கண்
பார்த்தும் - சிலருக்குத் திருநோக்கருளியும், சிலர்க்கு நீண்முடி துளக்கியும் -
சிலருக்கு நீண்ட முடியினை அசைத்தும், அருள் பரிசில் தந்து - (இவ்வாறு)
அருட்கொடை நல்கி, அண்டம் காத்த கண்டன் எழுந்து - அண்டங்கள்
பொன்றாது (நஞ்சினையுண்டு) காத்தருளிய திருமிடற்றினையுடைய இறைவன்
எழுந்து, ஓர் மண்டபத்திடை புக்கு - ஒரு மண்டபத்துட் புகுந்து, கடிமணக்
கவின் கொள்வான் - திருமணக் கோலம் கொள்ளுதற்குத்
திருவுள்ளங்கொள்ள எ-று.
தீர்த்தன்
- தூயன். தகுதிக்கேற்ப வார்த்தை முதலியன
வழங்கியருளினன்; அவையெல்லாம் அருட்கொடையேயென்றார். நஞ்சினைத்
தரித்ததாகலின் கண்டம் காத்ததென்றார். கொள்வான் - கொள்ளக் கருத. (95)
ஆண்ட நாயகன்
றிருவுளக்
குறிப்புணர்ந் தளகைநா யகனுள்ளம்
பூண்ட காதன்மேற் கொண்டெழு
மன்புந்தன் புனிதமெய்த் தவப்பேறும்
ஈண்ட வாங்கணைந் தெண்ணிலா
மறைகளு மிருவரு முனிவோருந்
தீண்ட ருந்திரு மேனியைத்
தன்கையாற் றீண்டிமங் கலஞ்செய்வான்*. |
(இ
- ள்.) ஆண்ட நாயகன் திரு உளக் குறிப்பு உணர்ந்து அளகை
நாயகன் - எல்லா உயிர்களையும் ஆண்டருளியய இறைவனது திருவுள்ளக்
குறிப்பினை அறிந்து அளகைப் பதியின் தலைவனாகிய குபேரன், உள்ளம்
பூண்ட காதல் மேற்கொண்டு - உள்ளத்திலுள்ள விருப்பத்தை மேற்கொண்டு,
எழும் அன்பும் - எழுந்த அன்பும், தன் புனித மெய்த் தவப்பேறும் ஈண்ட -
தனது தூய உண்மைத் தவப்பயனும் வந்து கைகூட, ஆங்கு அணைந்து-அம்
(பா
- ம்.) * செய்தான்.
|