I


402திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



மண்டபத்திற் சென்று, எண் இலா மறைகளும் - அளவில்லாத வேதங்களும்,
இருவரும் - திருமால் அயன் என்னும் இருவரும், முனிவோரும் -
முனிவர்களும், தீண்டு அரும் திருமேனியை - தீண்டுதற்கரிய திருமேனியை,
தன் கையால் தீண்டி மங்கலம் செய்வான் - தன் கையாற் றொட்டுத்
திருமணக் கோலம் செய்யத் தொடங்கினான் எ - று.

     குபேரன் தோழனாகலின் மணக்கோலஞ் செய்வானாயினான். (96)

பூந்து கிற்படாங் கொய்சகத்
     தானைபின் போக்குகோ வணஞ்சாத்தி
ஏந்தி ரட்டைஞாண் பட்டிகை
     யிறுக்கிவண் டிரைக்குநாண் மலர்க்குஞ்சி
வேய்ந்து கற்பகப் புதுமலர்ச்
     சிகழிகை மிலைந்துநீ றணிமெய்யிற்
சாந்த மான்மதந் தண்பனி
     நீரளாய்த் தடக்கையான் மடடித்தான்.

     (இ - ள்.) பூந்துகில் படாம் - அழகிய ஆடையை, கொய்சகத் தானை
- (முன் புறத்தில்) கொய்சக ஆடையாகவும், பின் - பின்புறத்தில், போக்கு
கோவணம் சாத்தி - போக்குகின்ற கோவணமாகவும் சாத்தி, ஏந்து இரட்டை
ஞாண் பட்டிகை இறுக்கி - அழகு மிக்க இரட்டையாகிய அரைஞாணைப்
பட்டிகையோடு இறுக்கி, வண்டு இரைக்கும் நாள் மலர்க் குஞ்சி வேய்ந்து -
வண்டுகள் ஒலிக்கும் அன்றலர்ந்த மலர்களையணிந்த குஞ்சியைக்
கொண்டையாகப் புனைந்து, கற்பகம் புது மலர்க் குஞ்சி வேய்ந்து -
வண்டுகள் ஒலிக்கும் அன்றலர்ந்த மலர்களையணிந்த குஞ்சியைக்
கொண்டையாகப் புனைந்து, கற்பகம் புது மலர் சிகழிகை மிலைந்து -
கற்பகத்தின் புதிய மலர்களாற் றொடுத்த மாலையை (அக்கொண்டையில்)
சூடி, நீறு அணி மெய்யில் - திருநீறு தரித்த திருமேனியில், சாந்தம் மான்
மதம் தண் பனிநீர் அளாய் - சந்தனத்தோடு மிருக மதத்தையும் குளிர்ந்த
பனி நீரையுங் கலந்து, தடக்கையால் மட்டித்தான் - நீண்ட கையாற்
பூசினான் எ-று.

     துகிலாகிய படாம். கொய்சகம் - அடுக்கடுக்காக மடித்துச் செருக்குவது.
பட்டிகை - அரைக்கச்சு. குஞ்சியை வேய்ந்து. அளாய் : அளரவியெனபதன்
விகாரம். மட்டித்தல் - அப்புதல், பூசுதல். (97)

இரண்டு செஞ்சுடர் நுழைந்திருந் தாலென
     விணைமணிக் குழைக்காதிற்
சுருண்ட தோடுபொற் குண்டலந் திணியிரு
     டுரந்துதோட் புறந்துள்ள
மருண்ட தேவரைப் பரமென மதிப்பவர்
     மையல்வல் லிருண்மான*
இருண்ட கண்டமேன் முழுமதி கோத்தென
     விணைத்தகண் டிகைசாத்தி.

     (பா - ம்.) * மாள.