(இ
- ள்.) இணைமணிக் குழைக்காதில் - இரண்டாகிய அழகிய சங்கக்
குழைகள் அணிந்த திருக் செவிகளில், இரண்டு செஞ்சுடர் நுழைந்து
இருந்தாலென - இரண்டு சூரியர்கள் குடிபுகுந்து இருந்தாற் போல, சுருண்ட
பொன்தோடு குண்டலம் - சுருண்ட பொற்றோடும் பொற் குண்டலமும், திணி
இருள் துறந்து தோள் புறம் துள்ள - செறிந்த இருளை ஒட்டித் தோட்புறத்தில் அசைந்தாடத்
(தரித்தும்), மருண்ட தேவரை - மயக்கமுற்ற தேவர்களை, பரம்
என மதிப்பவர் - பரம் பொருளென்று கருதுபவரின், மையல் வல் இருள்மான
இருண்ட - மயக்கமாகிய வலிய இருளையொக்க இருண்ட, கண்டமேல் -
திருமிடற்றின் மேல், முழுமதி கோத்தென - நிறைமதியைக் கோவை
செய்தாற்போல, இணைத்த கண்டிகை சாத்தி - இணைத்துச் செய்த வயிரக்
கண்டிகையைத் தரித்தும் எ - று.
துள்ளுமாறு
தரித்து என வருவித்துரைக்க. மருண்ட தேவர் - பாசத்தாற்
கட்டுண்ட தேவர்; மயக்கத்தால் தம்மையே பரமெனக் கருதிய ஏனைத் தேவர்; ஈறிலாதவனாகிய
ஈசனையன்றி ஏனைத் தேவரைப் பரமென நினைப்பது
அறியாமையென்றார்;
"சாவமுன்
னாட்டக்கன் வேள்வித் தகர்தின்று நஞ்சமஞ்சி
ஆவவெந் தாயென் றவிதா விடுநம் மவரவரே
மூவரென் றேயெம் பிரானொடு மெண்ணிவிண் ணாண்டுமண்மேல்
தேவரென் றேயிறு மரந்தென்ன பாவந் திரிதவரே" |
என்னும் திருவாசகமும்
காண்க. கோத்தென : விகாரம். முதலடி :
இல்பொருளுவமம். (98)
வலங்கி டந்தமுந்
நூல்வரை யருவியின்
வயங்குமார் பிடைச்சென்னித்
தலங்கி டந்தவெண் டிங்களுற் றமுதெனத்
தரளமா லிகைசாத்தி
இலங்கி டந்தமா லிகைப்பரப் பிடையியைத்
திருண்*முகம் பிளந்தாரங்
கலங்கி டந்தபாற் கடல்முளைத் தெழுமிளங்
கதிரெனக் கவின்செய்து. |
(இ
- ள்.) வலம் கிடந்த முந்நூல் - வலப்புறங்கிடந்த முந்நூலானது,
வரை அருவியின் வயங்கு மார்பிடை - மலையினின்று ஒழுகும் அருவி போல
விளங்கும் திருமார்பின் கண், சென்னித் தலம் கிடந்த வெண் திங்கள் ஊற்று
அமுது என - முடியின்கண் தங்கிய வெள்ளிய திங்களால் பொழியப் பெற்ற
அமுதத்தைப் போல. தரள மாலிகை சாத்தி - முத்துமாலையைத் தரித்தும்,
இலங்கிடு அந்த மாலிகைப் பரப்பிடை - விளங்குகின்ற அந்த முத்துமாலைப்
பரப்பின் நடுவில், இருள் முகம் பிளந்த ஆரம் - இருள் முகத்தைக் கிழித்த
மாணிக்க மாலையை, கலம் கிடந்த பால் கடல் முளைத்து எழும் -
மரக்கலங்கள் தங்கிய பாற்கடலின்கண் தோன்றி எழுந்த, இளங்கதிர் என
இயைத்து - இளஞ் சூரியனைப் போலத் தரித்து, கவின் செய்து - அழகு
செய்தும் எ - று.
(பா
- ம்.) * இமைத்திருள்.
|