I


404திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



இலங்கிடு, இடு : துணைவினை. பிளந்த என்னும் பெயரெச்சத்தின் அகரம்
தொக்கது. கடலென்னும் பொதுமை பற்றிக் கலம் கூறினார். (99)

திசைக டந்தநாற் புயங்களிற் பட்டிகை
     சேர்த்துவா ளெறிக்குந்தோள்
நசைக டந்தநல் லார்மனங் கவர்ந்துயிர்
     நக்கவங் கதஞ்சாத்தி
அசைக டங்கலுழ் வாரண வுரிவைநீத்
     தணிகொளுத் தரீயம்பெய்
திசைக டந்தமந் திரபவித் திரமெடுத்
     தெழில்விர னுழைவித்து.

     (இ - ள்.) திசை கடந்த நால் புயங்களில் - திக்குகளைக் கடந்த
நான்கு திருத்தோள்களிலும், பட்டிகை சேர்த்து - பட்டிகைகளைத் தரித்தும்,
வாள் எறிக்கும் தோள் - ஒளி வீசும் அத் தோள்களில், நசைகள் தந்த
நல்லார் மனம் கவர்ந்து - விருப்பமிக்க (முனிவர்) பன்னியர்களின் மனத்தைக்
கவர்ந்து - உயிர் நக்க - (அவர்கள்) உயிரையுமுண்ட, அங்கதம் சாத்தி -
தோளணிகளை அணிந்தும், கடம் கலுழ் - மதத்தைப் பொழியும், அசை -
அசைகின்ற, வாரண உரிவை நீத்து - யானையின் தோலை அகற்றி
-அணிகொள் உத்தரீயம் பெய்து - அழகிய மேலாடையைச் சாத்தியும், இசை
கடந்த மந்திர பவித்திரம் எடுத்து - சொல்லைக் கடந்த மந்திர வடிவமான
பவித்திரத்தை எடுத்து, எழில் விரல் நுழைவித்து - அழகிய விரலில்
அணிந்தும் எ - று.

     நக்கிய வென்பது விகாரமாயிற்று; நல்லாரைப் பொதுமையிற் கொண்டு.
உயிரைப் பருகுமாறு என்றுரைத்தலுமாம்; விருப்பத்தினிங்கிய நல்லார்
என்றுமாம். அங்கதம் - தோள்வளை. அசை வாரணமென்க. இசை -
புகழ்ச்சியுமாம். பவித்திரம் - மோதிரம். (100)

உடுத்த கோவண மிசைப்பொலந் துகிலசைத்
     துரகமைந் தலைநால
விடுத்த போல்வெயின் மணித்தலைக் கொடுக்குமின்
     விடவிரு புறந்தூக்கித்
தொடுத்த தார்புயந் தூக்கிநூ புரங்கழல்
     சொற்பதங் கடந்தன்பர்க்
கடுத்த தாளிலிட் டிருநிதிக் கோமக
     னருந்தவப் பயன்பெற்றான்.

     (இ - ள்.) உடுத்த கோவணம் மிசை - உடுத்த கோவணத்தின் மேல்,
பொலம் துகில் அடைத்து - பொன்னாடையை இறுகக் கட்டி (அதன் மேல்),
உரகம் ஐந்தலை நால விடுத்த போல் - பாம்பு ஐந்து தலைகளையும்
தொங்கவிட்டமை போல. வெயில் மணித்தலைக் கொடுக்கு - ஒளி
பொருந்திய மாணிக்கத் தலைக் கொடுக்கு, மின்விட - ஒளிவீச, இரு புறம்