I


திருமணப் படலம்405



தூக்கி - இரண்டு பக்ககளிலும் தொங்க விட்டும், தொடுத்ததார் புயம் தூக்கி
- மலர்களாற்றொடுத்த மாலையினைத் திருத்தோளிற் சாத்தியும், சொல்பதம்
கடந்து அன்பர்க்கு அடுத்த தாளில் - சொல்லின் அளவையுங் கடந்தும்
அடியார்களுக்கு அண்மையிற் பொருந்திய திருவடிகளில், நூபுரம் கழல்
இட்டு - சிலம்பையும் வீரகண்டையையும் அணிந்தும், இருநிதிக் கோமகன்
- சங்கம் பதுமம் என்னும் இரண்டு, நிதிகளுக்குந் தலைவனாகிய குபேரன்,
அருந்தவப் பயன் பெற்றான் - அரிய தவங்களின் பயனை அடைந்தான்
எ-று. கொடுக்கு - ஒருவகையணி; கொய்சகமென்பாரு முளர். சொற்பதம் -
சொல்லினளவு : சொல்லாகிய பாதமுமாம்;

     "சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க"

என்பது திருவாசகம்; முன்னும் வந்தது. அன்பர் - அவனருள் வழி நிற்போர்.
இருநிதி - பெரிய நிதியுமாம். கோமகன் - கோமான்; தலைவன். (101)

செங்கண் மாலய னிந்திரன் முதற்பெருந்
     தேவர்க்கும் யாவர்க்கும்
மங்க லந்தரு கடைக்கணா யகனொரு
     மங்கலம் புனைந்தான்போற்
சங்கை கொண்டுகும் போதரன் முதுகின்மேற்
     சரணம்வைத் தெதிர்போந்த
துங்க மால்விடை மேற்கொடு நடந்தனன்
     சுரர்கள்பூ மழைதூர்த்தார்.

     (இ - ள்.) செங்கண்மால் அயன் இந்திரன் முதல் - சிவந்த
கண்களையுடைய திருமால் பிரமன் இந்திரன் முதலிய, பெருந்தேவர்க்கும்
யாவர்க்கும் - பெரிய தேவருக்கும் மற்றியாவருக்கும், கடைக்கண் மங்கலம்
தரு நாயகன் - கடைக்கணோக்கத்தால் எல்லா நன்மைகளையும்
அளிக்கவல்ல இறைவன், ஒரு மங்கலம் புனைந்தான் போல் சங்கை கொண்டு
- (தான்) ஒரு மங்கலக் கோலஞ் செய்து கொண்டவன் போலத்
திருவுளங்கொண்டு, கும்போதரன் முதுகின்மேல் சரணம் வைத்து -
கும்போதரன் முதுகின்மேல் தனது திருவடியை வைத்து, எதிர் போந்த
துங்க மால்விடை மேற்கொடு எதிரே வந்த உயர்ந்த பெரிய இடபத்திலேறி,
நடந்தனன் - நடந்தருளினான்; சுரர்கள் பூமழை தூர்த்தார் - தேவர்கள்
மலர்மாரி பொழிந்தனர் எ - று.

     மங்கலம் - சுபம்; நன்மை. தன் கடைக்கணோக்கத்தாலேயே
யாவர்க்கும் மங்கலத்தை யருள்பவன் என்றும் எல்லா மங்கலங்கட்கும்
உறைவிடமாயிருக்கச் செய்தே புதுவதாக மங்கல மெய்தினான் போல் ஒரு
விளையாடல் புரிந்தானென்றார்;

"மானணி நோக்கினார்த மங்கலக் கழுத்துக் கெல்லாம்
தானணி யானபோது தனக்கணி யாதுமாதோ"

என்னும் கம்பராமாயணக் கருத்து ஒருசார் ஒப்புமையுடையது. சங்கை -
எண்ணம். கும்ப உதரன் - குடம் போலும் வயிறுடையன்;
கணங்களிலொருவன். (102)