அந்த ரத்துவ ரந்தர துந்துபி
யைந்துமார்த் தனர்சூழ
வந்த ரக்கரு மியக்கரும் பூதரு
மங்கல வியங்கல்லக்
கொந்த லர்க்கருங் குழலர மடந்தையர்
கொளைவல்விஞ் சையர்தாளந்
தந்த சைத்திட மலர்ந்தபூங் கொம்பர்போற்
சாய்ந்தசைந் தனராட. |
(இ
- ள்.) அந்தரத்தவர் அந்தர துந்துபி ஐந்தும் ஆர்த்தனர் சூழ
- தேவர்கள் தேவ துந்துபி ஐந்தனையும் முழக்கிச் சூழவும், அரக்கரும்
இயக்கரும் பூதரும் வந்து மங்கல இயம் கல்ல - அரக்கர்களும் இயக்கர்களும்
பூதங்களும் வந்து மங்கல இயங்களைக் கல்லென்று முழக்கவும், கொளைவல்
விஞ்சையர் தாளம் தந்து அசைத்திட - இசையில் வல்ல வித்தியாதரர் தாளம்
போட்டு ஆட்டுவிக்க, கொந்து அலர் கருங்குழல் அரமடந்தையர் -
கொத்தோடு பூக்களையணிந்த கரிய கூந்தலையுடைய தேவ மகளிர், மலர்ந்த
பூங்கொம்பர்போல் சாய்ந்து அசைந்தனர் ஆட - அலர்ந்த பூக்களையுடைய
கொம்புபோல் சாய்ந்து அசைந்து ஆடவும் எ - று.
கல்ல
: கலிக்க வென்பதன் விகாரம்; முன்னும் உரைத்தமை காண்க.
கொளை - பாட்டு;
என்பது புறம். கொம்பர்
: ஈற்றுப் போலி. ஆர்த்தனர், அசைந்தனர் என்னும் வினை முற்றுக்கள் எச்சங்களாய்
நின்றன. (103)
துங்க மாயிரங் கருவியா யிரமலைத்
தூங்கிருண் முழைதோறுஞ்
சிங்க மாயிரம் வாய்திறந் தார்த்தெனச்
சிரங்களா யிரந்திண்டோள்
அங்க மாயிர மாயிர முடையவ
னாயிர முகந்தோறுஞ்
சங்க மாயிர மாயிர மாயிரந்
தடக்கையும் பிடித்தூத. |
(இ
- ள்.) துங்கமாய் இரங்கு அருவி மலை - மிகுதியாய் ஒலிக்கும்
அருவிகளையுடைய மலையின்கண், இருள் தூங்கு ஆயிரம் முழை தோறும் -
இருள் குடி கொண்ட ஆயிரங் குகைகள்தோறும், சிங்கம் ஆயிரம் வாய்
திறந்து ஆர்த்தென - ஆயிரம் சிங்கங்கள் வாய் திறந்து ஒலித்தாற் போல,
ஆயிரம் சிரங்கள் - ஆயிரந் தலைகளையும், ஆயிரம் ஆயிரம் திண் தோள்
அங்கம் உடையவன் - இரண்டாயிரம் திண்ணிய தோள்களாகிய
உறுப்புக்களையுமுடைய பானுகம்பன், ஆயிரம் முகந்தோறும் - ஆயிரம்
|