வாய்கள்தோறும்,
ஆயிரம் சங்கம் - ஆயிரம் சங்குகளை வைத்து, ஆயிரம்
ஆயிரம் தடக்கையும் பிடித்து ஊத - இரண்டாயிரம் நீண்ட கைகளாலும்
பிடித்து ஊதவும் எ - று. தோளாகிய அங்கம். முகம் - வாய்.
ஒவ்வொன்றிலுமென்பார் தோறுமென்றார். (104)
போக்கு மாயவன்
புணர்ப்பையு மிருண்மலப்
புணர்ப்பையுங் கடந்தெம்மைக்
காக்கு நாயக னருச்சனை விடாதருட்
கதியடைந்துள வாணன்
தூக்கு நேர்பட வாயிரங் கரங்களாற்
றொம்மென முகந்தோறுந்
தாக்க வேறுவே றெழுகுட முழாவொலி
தடங்கட லொலிசாய்ப்ப. |
(இ
- ள்.) போக்கும் மாயவன் புணர்ப்பையும் - போக்கத்தக்க
மாயையினது வலிய தொடக்கையும், இருள் மலப் புணர்ப்பையுங் கடந்து
- ஆணவ மலத்தின் தொடக்கையும் (இயல்பாகவே) நீங்கி, எம்மைக் காக்கும்
நாயகன் - எம்மை ஆளும் சிவபெருமானது, அருச்சனை விடாது -
பூசனையை இடையறாது கொண்டு, அருள் கதி அடைந்துள வாணன் -
(அவனது) திருவருளால் வீடுபேற்றையடைந்த வாணனென்பான், தூக்கு
நேர்பட - பாடலுக்குப் பொருந்த, ஆயிரம் கரங்களால் - ஆயிரங்
கைகளினாலும், முகந்தோறும் தாக்க - வாய்கள் தோறும் மோத, தொம் என
வேறு வேறு எழு குட முழா ஒலி - தொம் என்று வேறுவேறாக எழுகின்ற
குடமுழவின் ஒலியானது, தடங்கடல் ஒலி சாய்ப்ப - பெரிய கடலின்
ஒலியைக் கீழ்ப்படுத்தவும் எ - று.
கடந்து
கதியடைந்துள என வாணனுக்கேற்றியுரைத்தலுமாம். தூக்கு -
தாளமுமாம். தொம்மென : குறிப்பு. முகம் - கண்; அடிக்குமிடம். (105)
முனிவ ரஞ்சலி
முகிழ்த்தசெங் கையினர்
மொழியுமா சியருள்ளங்
கனிவ ரும்பிய வன்பினர் பரவவுட்
கருத்தொடு* வழிக்கொண்டோர்
துனிவ ருங்கண நாதர்கொட் டதிர்கரத்
துணையினர் மழைபோலப்
பனிவ ருங்கண ராடிய தாளினர்
பாடுநா வினரேத்த. |
(இ
- ள்.) முனிவர் அஞ்சலி முகிழ்த்த செங்கையினர் - முனிவர்கள்
வணங்கிக் கூப்பி சிவந்த கைகளையுடையவர்களாய், மொழியும் ஆசியர்
(பா
- ம்.) * கருத்தொரு.
|