I


408திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



கூறுகின்ற வாழ்த்து மொழிகளையுடையவராய், உள்ளம் கனிவு அரும்பிய
அன்பினர் - உள்ளத்தின் கண் கனிந்து வெளித் தோன்றிய
அன்பினையுடையவர்களாய், பரவ - (ஒரு பால்) துதித்து வரவும், உள்
கருத்தொடு வழிக் கொண்டோர் - ஒன்றிய கருத்துடன் வழிக்
கொண்டோராகிய, துனிஅருங் கணநாதர் - துன்பமில்லாத கணத்
தலைவர்கள், கொட்டு அதிர்கரத் துணையினர் - கொட்டி அதிர்க்கின்ற
இரண்டு கைகளையுடையவர்களாய், மழை போல பனிவரும் கண்ணர் -
மழை போல ஆனந்தவருவி பொழியும் கண்களையுடையவர்களாய், ஆடிய
தாளினர் - ஆனந்தக் கூத்து ஆடும் அடிகளையுடையவர்களாய், பாடும்
நாவினர் - பாடுகின்ற நாவினையுடையவர்களாய், ஏத்த - (ஒருபால்) பரவி
வரவும் எ-று.

     கையினர், ஆசியர், அன்பினர் என்னும் குறிப்பு முற்றுக்கள் எச்சமாய்ப்
பரவ என்பதனையும், துணையினர், கண்ணர், தாளினர் என்னும் குறிப்பு
முற்றுக்கள் எச்சமாய் ஏத்த என்பதனையும் கொண்டன. கண்ணர் கணரென
விகாரமாயிற்று. (106)

இந்தி ரன்மணிக் களாஞ்சிகொண் டொருமருங்
     கெய்தமெல் லிலைவாசந்
தந்தி லங்குபொன் னடைப்பைகொண் டீசனோர்
     சார்வர மருத்துக்கோ
வந்தி ரங்கொலி யாலவட் டம்பணி
     மாறவா ரழறூபந்
தந்து நேரநீர்க் கடவுள்பொற் கோடிகந்
     தாமரைக் கரந்தூக்க.

     (இ - ள்.) இந்திரன் மணிக்களாஞ்சி கொண்டு ஒருமருங்கு எய்த -
இந்திரன் மணிகள் பதித்த களாஞ்சியைக் கையிலேந்திக் கொண்டு ஒருபால்
வரவும், ஈசன் - ஈசானன். மெல்லிலை வாசம் தந்து இலங்கு பொன்
அடைப்பை கொண்டு ஓர் சார் வர - வெற்றிலையையும் வாசப் பொருளையுந்
தந்து விளங்கா நின்ற பொன்னாலாகிய அடைப்பையை ஏந்தி ஒரு பால்
வரவும், மருத்துக்கோ - காற்றுக் கடவுள், வந்து இரந்கு ஒலி ஆலவட்டம்
பணிமாற - வந்து ஒலிக்கும் ஒலியினையுடைய ஆலவட்டம் வீசி (ஒருபால்
வரவும்), ஆர் அழல் - நிறைந்த தீக்கடவுள், தூபம் தந்து நேர - தூபத்தைத்
தந்து (ஒருபால்) வரவும், நீர்க்கடவுள் பொன் கோடிகம் தாமரைக் கரம் தூக்க
- வருணதேவன் பொற்பூந் தட்டைக் தாமரை மலர் போன்ற கையில் ஏந்தி
(ஒருபால் வரவும்) எ - று.

     மெல்லிலை - வெற்றிலை : வினைத்தொகை! திருநகரச் சிறப்பில்
'மெல்லிலைப் பசுங் கொடியினால்' என்புழி உரைத்ததனையும் நோக்குக.
பணிமாறல், மரபு. கோடிகம் - பூந்தட்டு. (107)

நிருதி யாடிகொண் டெதிர்வர வடிக்கடி
     நிதிமுகந் தளகைக்கோன்
கருதி யாயிரஞ் சிதறிடத் தண்டிநன்*
     காஞ்சுகர் வினைசெய்யப்

     (பா - ம்.) * தண்டினன்.