I


திருநாட்டுச் சிறப்பு41



துளிகள் வழிகின்ற ஓடைகளிலும், எங்கும் - எல்லாவிடத்தும், ஓடி -
விடைந்து சென்று, மன்று உடையார்க்கு அன்பர் - தில்லைமன்றுடைய
சிவபிரான் அடியார்களின், உள்ளத்து - திருவுள்ளத்தின்கண், நிறைவு
அழியாத - நிறைதல் நீங்காத, அன்பு போல் நிரம்பிற்று - அன்பைப்போல
நிரம்பியது எ - று.

     கலைகள், எழுத்திலக்கணம் முதலாகவுள்ள அறுபத்து நான்கும்.
‘நிறைவழியாத’ என்பதனை உள்ளத்திற்கு அடையாக்கி, இன்ப நிறைவுடைய
என்று கூறலும் ஆம்; அன்பராயினார் ‘இறைவன் கழலேத்து மின்ப மின்பமே’
என்று கொள்வராகலின் அவருள்ளம் இன்பத்தால் நிறைந்திருக்குமென்க.
‘நிறைக்காண்ட சிந்தையா னெல்வேலி வென்ற நின்றசீர்நெடுமாறன்’ என்னுந்
திருத்தொண்டத்தொகையும் காண்க. சோலை முதலியன பெயர்ச்
செவ்வெண். அன்று, ஏ : அசை. (15)

              [கலிநிலைத்துறை]
இழிந்த மாந்தர்கைப் பொருள்களு மிகபரத் தாசை
கழிந்த யோகியர் கைப்படிற் றூயவாய்க் களங்கம்
ஒழிந்த வாறுபோ லுவரியுண் டுவர்கெடுத் தெழிலி
பொழிந்த நீரமு தாயின புவிக்கும்வா னவர்க்கும்.*

     (இ - ள்.) இழிந்த மாந்தர் கைப்பொருள்களும் - கீழ்மக்களிடத்துள்ள
பொருள்களும், இகபரத்து ஆசை கழிந்த யோகியர் - இம்மைப் பயன்
மறுமைப் பயன்களில் அவா நீங்கிய சிவயோகியரின், கைப்படில் -
திருக்கரத்தில் பட்டால், தூயவாய் களங்கம் ஒழிந்தவாறு போல் - குற்றத்தின்
நீங்கித் தூய்மையாயினமைபோல, எழிலி - மேக மானது, உவரி உண்டு -
கடல் நீரைப் பருகி, உவர்கெடுத்து - (அதிலுள்ள) உப்பைப் போக்கி,
பொழிந்தநீர் - சொரிந்த நீர்த்துளிகள். புவிக்கும் வானவர்க்கும் - நிலவுலகத்
துயிர்கட்கும் வானின்கண் உள்ள தேவர்கட்கும், அமுது ஆயின -
அமிழ்தமாயின எ - று.

     துறக்கவின்பமும் அமிதன்மாலையாதலின் அவ்வாசை கூடாதாயிற்று.
ஆசைகழிதல் விராகமெனப்படும். யோகியர்கைப்படில் என உடம்பொடு
புணர்த்தலால் அவரே தானமளித்தற்குச் சிறந்தார் என்பது பெறப்படும்.

"தண்டறு சிந்தைத் தபோதனர் தாமகிழ்ந்
துண்டது மூன்று புவனமு முண்டது
கொண்டது மூன்று புவனமுங் கொண்டதென்
றெண்டிசை நந்தி யெடுத்துரைத் தானே"

என்று திருமந்திரங் கூறுதல் காண்க.

"சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கு மீண்டு"


     (பா - ம்.) * வானகர்க்கும்.