விட்டெனத் தோன்றும்
- அயனும் அரியுமாகிய இரண்டு தேவர்களும்
கிளைத்தாற் போலக் காணப்படும், வண்ணம் முத்தலைப்படை - அழகிய
மூன்று தலையையுடைய சூலப்படையை, பண்ணவப் பதினெண் படைக்கலமும்
- தெய்வத் தன்மையுடைய பதினெட்டுப் படைகளும், தன் பக்கமாய்ச்
சேவிப்ப - அதன் பக்கத்தே சேவித்து வர, குட வயிறு உடை ஒரு
பெரும்பூதம் - குடம் போலும் வயிறுடைய ஒரு பெரிய பூதமானது, எடுத்து
- அதனை யேந்தி, அண்ணல் முச்சுடர் முளைத்து - பெருமை பொருந்திய
மூன்று சுடர்களும் உதிக்கப் பெற்று, ஒருவரை நடந்து அனையது ஓர்
மருங்கு எய்த - ஒரு மலை நடந்ததையொக்க ஒருபால் வரவும் எ - று.
சிவபிரானிடத்தில்
ஏனையிருவரும் தோன்றினமையை,
"படைத்தளித்
தழிப்பமும் மூர்த்திக ளாயினை" |
|
"ஒருவனா யுலகேத்த
நின்ற நாளோ
ஓருருவே மூவுருவ மான நாளோ" |
என்னும் தேவாரத்
திருவாக்குகளிற் காண்க;
"மைந்த
நின்னையென் வலப்புறத் தீன்றன னறிய
பைந்து ழாய்முடிக் கண்ணனை யெனதிடப் பாலில்
தந்த ளித்தன னீவிர்வெங் கரிமுகன் றழல்வேற்
கந்த னேரெனக் கருணையி னுச்சிமோந் துரைப்பான்" |
என்று கூர்மபுராணங்
கூறுவதும் நோக்கற் பாலது. கப்பு - கிளை; கவர்பு
என்பது மருவிற்று. பூதம் - கும்போதரன். தன் பக்கம் - சூலத்தின் பக்கம்.
ஆகவென்பது விகாரம். முளைத்து - முளைக்கட்டு; முளைத்த என்பது
விகாரமாயிற்றுமாம். நடந்தது என்பது நடந்து என விகாரமாயிற்று.
அனையதாக எய்தவென்க. (111)
பந்த நான்மறைப் பொருட்டிரட் டெனவட
பாடல்செய் தெதிர்புட்ப
தந்த னேத்தவா னுயிருண வுருத்தெழு
தழல்விடத் தெதிர்நோக்கும்
அந்த மாதியி லானிழல் வடிவமா
யாடியி னிழல்போல
வந்த சுந்தரன் சாத்துநீ றொடுதிரு
மாலையு மெடுத்தேந்த. |
(இ
- ள்.) பந்தம் நான் மறைப் பொருள் திரட்டு என -
தளையினையுடைய நான்கு வேதங்களின் பொருளைத் திரட்டிக் கூறினாற்
போல, வட பாடல் செய்து எதிர் புட்பதந்தன் ஏத்த - வடமொழிப்
பாடல்களைக் கூறி எதிரே புட்பதந்தன் துதித்து வரவும், வான் உயிர் உண
உருத்து எழுதழல் விடத்து எதிர் நோக்கும் - தேவர்களின் உயிரை உண்ணச்
சினந்து எழுந்த தீயைப்போலும் நஞ்சினுக்கு எதிரே செல்லும், அந்தம் ஆதி
இலான் நிழல் வடிவமாய் - ஈறும் முதலுமில்லாத இறைவனது சாயையாகிய
வடிவமாய், ஆடியின் நிழல் போல வந்த சுந்தரன் - கண்ணாடியின் நிழல்
|