I


414திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



முகிறவழ் புரிசை மூதூர் முதற்பெரு வாயி* னீந்தி
அகிறவழ் மாட வீதி வலம்பட வணைவா னாக
நகிறழை பொலங்கொம் பன்ன நன்னகர் மகளி ரம்பொன்
துகிறழை மருங்கு லாயத் தொகைபுறந் தழுவச் சூழ்ந்தார்.

     (இ - ள்.) முகில் தவழ் புரிசை மூதூர் - மேகந் தவழுகின்ற
மதிலையுடைய பழைய பதியாகிய மதுரையின், முதல் பெருவாயில் நீந்தி
- முதற்பெருங் கோபுர வாயிலைக் கடந்து, அகில்தவழ் மாட வீதி வலம்பட
அணைவான் ஆக - அகிற் புகை தவழ்கின்ற மாளிகைகளையுடைய வீதியில்
வலமாக எழுந்தருள, நல் நகர் - நல்ல அந்நகரிலுள்ள, நகில் தழை பொலம்
கொம்பு அன்ன மகளிர் - கொங்கைகளாகிய அரும்புகள் தோன்றிய
பொற்கொம்பினை ஒத்த பெண்கள், அம் பொன் துகில் தழை மருங்குல்
ஆயத் தொகை - அழகிய பொன்னாடை தழைந்த இடையினையுடைய
தோழிகள் கூட்டம், புறம் தழுவச் சூழ்ந்தார் - புறத்தே நெருங்கி வர அங்கே
சூழ்ந்தார்கள் எ - று.

     நகில் - கொங்கை. (116)

தமிழ்முதற் பதினெண் டேத்து மகளிருந் தாரு நாட்டின்
அமிழ்தமன் னவரு முல்லை யம்புயங் குமுத நீலங்
குமிழ்நறுங் கோங்கு காந்தள் கோழிண ரசோகம் வாசம்
உமிழ்தர மலர்ந்த நந்த வனமென வொருங்கு மொய்த்தார்.

     (இ - ள்.) தமிழ் முதல் பதினெண் தேத்து மகளிரும் - தமிழ் நாடு
முதல் பதினெட்டு நாட்டிலுமுள்ள மாதரும், தாரு நாட்டின் அமிழ்தம்
அன்னவரும் - கற்பக நாட்டிலுள்ள அமுதமொத்த மகளிரும், முல்லை -
முல்லையும், அம்புயம் - தாமரையும், குமுதம் - ஆம்பலும், நீலம் -
நீலோற்பலமும், குமிழ் - குமிழும், நறுங்கோங்கு - நறிய கோங்கும்,
காந்தள் -செங்காந்தளும். கோழ் இணர் அசோகம் - கொழுவிய
பூங்கொத்துகளையுடைய அசோகமுமாகிய இவைகள், வாசம் உமிழ்தர -
மணம் வீச, மலர்ந்த நந்தவனம் என - பூத்த நந்தவனம் போல, ஒருங்கு
மொய்த்தார் - ஒரு சேர நெருங்கிச் சூழ்ந்தார்கள் எ - று.

     தேத்து: தேம் என்பது அத்துச்சாரியை பெற்று ஈறு முதலுங்கெட்டு
முடிந்தது: தேம் - தேசம். பதினெண்டேயம் முற்கூறப்பட்டன. பல், முகம்,
வாய், கண், மூக்கு, தனம், கை, மேனி என்பவற்றுக்கு முல்லை முதலியன
முறையே உவமமாகலின் அவை மலர்ந்த நந்தவனம் போல என்றார். (117)

எம்மைநீர் விடுதி ரேயோ வென்பபோற் கலையுஞ் சங்கும்
விம்மநாண் மடனு முங்க ணெஞ்சுடை வெளியா றாக
உம்மைநீத் தோடு மந்தோ வுரைத்தன முரைத்தோ மென்று
தம்மைநூ புரங்கால் பற்றித் தடுப்பபோ லார்ப்பச் சென்றார்.

     (பா - ம்.) * முகப்பெருவாயில்.