I


திருமணப் படலம்415



     (இ - ள்.) எம்மை நீர் விடுதிரேயோ என்பபோல் - எங்களை நீங்கள்
கைவிடுகின்றீர்களோ என்று முறையிடுதல் போல, கலையும் சங்கும் விம்ம -
(சோருகின்ற) மேகலையும் வளையும் ஒலிக்கவும், நாண்மடனும் - நாணமும்
மடமும், உங்கள் உடை நெஞ்சு வெளி ஆறு ஆக - உங்கள் உடைந்த
மனவெளியையே வழி ஆகக் கொண்டு, உம்மை நீத்து அந்தோ ஓடும் -
உங்களை விட்டு ஐயோ ஓடிவிடும்; உரைத்தனம் உரைத்தோம் என்று -
(அதனைச்) சொன்னோம் சொன்னோம் என்று, தம்மை கால் பற்றி
தடுப்பபோல் நூபுரம் ஆர்ப்பச் சென்றார் - தங்களைக் காலைப் பிடித்துத்
தடுப்பன போலச் சிலம்புகள் ஒலிக்கவும் சென்றார் எ - று.

     விடுதிரேயோ, ஏ : அசை. கலை - மேகலை. உடை நெஞ்சு என
மாறுக. அடுக்கு இரக்கத்தில் வந்தது. என்ப; தடுப்ப: தொழிற் பெயராய்
நின்றன. வேட்கையால் உடல் மெலிந்து கலையும் சங்கும் கழலா நிற்கும்.
இச்செய்யுள் தற்குறிப்பேற்றவணி. (118)

கடியவிழ் கமலக் காடு பூ.த்ததோர் கருணை வாரி
அடிமுதன் முடியீ றாக வலர்விழிக் குவளை சாத்திக்
கொடியசெம் பதுமப் போது குழன்மிசைச் சூடு வார்போற்
றொடியணி கரங்கள் கூப்பித் துதியென வினைய சொல்வார்.

     (இ - ள்.) கடி அவிழ் கமலக் காடு பூத்தது ஓர் கருணைவாரி -
மணம் விரிந்த தாமரைக் காடு பூத்த ஓர் அருட்கடலாகிய இறைவனின் அடி
முதல் முடி ஈறாக - திருவடி முதல் திருமுடி முடிய, விழிக் குவளை
அலர்சாத்தி - கண்களாகிய நீலமலரைச் சூட்டி, கொடிய செம்பதுமப்போது -
கொடியையுடைய செந்தாமரை மலர்களை, குழல் மிசைச் சூடுவார் போல் -
(தமது) கூந்தலின் மேலே அணிந்து கொள்வாரைப் போல, தொடி அணி
கரங்கள் கூப்பி - வளையல் அணிந்த : கைகளைத் தலைமிசைக் குவித்து,
துதி என இனைய சொல்வார் - துதி மொழிகள் போல இத்தன்மையவற்றைக்
கூறுவார்கள் எ - று.

     முகம் கண் கை முதலியன செந்தாமரை மலர் போலுதலின் கமலக்காடு
பூத்ததென்றார்;

"கருமுகில் தாமரைக் காடுபூத்து"

என்றார் கம்பரும்; இறைவன் திருமேனி முழுதும் செந்நிறமாதலின் இங்ஙனம்
கூறினாரென்னலுமாம்;

"செந் தாமரைக்கா டனைய மேனித் தனிச்சுடரே"

என மாணிக்கவாசகப் பெருமாள் அருளிச் செய்தமையுங் காண்க.
நோக்கினாரென்பார் 'விழிக்குவளை சாத்தி' என்றார். கமலக்காடு பூத்த
வாரியில் குவளை சாத்தியென்ற நயம் போற்றற்பாலது. அங்கையின் மேல்
தோள்காறும் நாளம் போறலின் 'கொடிய செங்கமலப் போது' என்றார். (119)

நங்கையென் னோற்றாள் கொல்லோ
     நம்பியைத் திளைத்தற் கென்பார்
மங்கையை மணப்பா னென்னோ
     வள்ளலு நோற்றா னென்பார்